Breaking : ஸ்டாலினுக்கு அடுத்த ஷாக்..! திமுக கூட்டணியில் நீடிக்க முடியாது.. ஐயுஎம்எல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

kadher moideen

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன.. ஆனால் தேர்தல் முடிவுகளுக்கு பின் முதல் ஆளாக காங்கிரஸ் திமுக கூட்டணியை முறித்துக் கொண்டு தவெகவுக்கு ஆதரவு வழங்கியது.. மேலும் அடுத்து நடைபெற உள்ள உள்ளாட்சி நாடாளுமன்ற தேர்தலிலும் தவெக உடன் கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் அறிவித்தது..


இதையடுத்து விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் தவெக ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவு தந்தன.. பின்னர் தவெக அழைப்பு விடுத்ததன் பேரில் விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீட் ஆகிய கட்சிகள் தவெக அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளன..

இந்த நிலையில் திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அறிவித்துள்ளது.. முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறோம்.. எனவே இன்றைய அரசியல் சூழலில் திமுக கூட்டணியில் நீடிக்க முடியாது.. இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலின் போது கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்.

மேலும் திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் அடுத்தடுத்து விலகுவதாக அறிவித்திருந்தன.. தற்போது ஐயுஎம்எல் கட்சியும் திமுக கூட்டணியில் இருந்து விலகியதால் திமுக தலைமை அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது..

RUPA

Next Post

எளிய அறிவுறுத்தல் மூலம் மோசமான படங்களை உருவாக்கும் ChatGPT..! AI குறித்து கவலை எழுப்பும் நிபுணர்கள்..!

Sat Jun 20 , 2026
செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டான ChatGPT, ஒரு எளிய உரை அறிவுறுத்தலைப் பயன்படுத்தி, ஆபாசமான, பாலியல் மற்றும் வன்முறை நிறைந்த படங்களை உருவாக்கத் தூண்டப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.. அது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இது செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு மற்றும் உள்ளடக்கக் கட்டுப்பாட்டில் உள்ள தொடர்ச்சியான சவால்களை எடுத்துக்காட்டுகிறது. OpenAI இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டதுடன், இந்த விவகாரம் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட பிறகு இது குறித்து விசாரித்ததாகவும் தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட […]
Chatgpt

You May Like