தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடு ஆந்திராவுக்கு சென்றதாக எழுந்துள்ள புகாரில் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுக்கு அமைச்சர் கீர்த்தனா பதிலடி கொடுத்துள்ளார்..
சிவகாசியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீர்த்தனா “ 30 நாட்களிலேயே நாங்கள் பல நிறுவனங்களை பார்த்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடும் அளவுக்கு கொண்டு வந்துள்ளோம்.. ஆந்திராவுக்கு தொழில் முதலீடுகள் சென்றுவிட்டது என்று கூறுவோருக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் சட்டப்பேரவையில் பேசுவேன்.. சட்டப்பேரவையில் இதுகுறித்து யாராவது கேள்வி எழுப்பினால், எந்த நேரத்தில் தொழில் முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றது என்பதை ஆதாரத்துடன் சொல்ல தயாராக இருக்கிறேன்..
சட்டப்பேரவையில் இதுகுறித்து கேள்வி எழுப்ப தயாராக இருந்துகொள்ளுங்கள்.. 30 நாட்களில் எந்த நிறுவனமும் மனதை மாற்றிக் கொண்டு வேறு இடத்திற்கு செல்லாது.. இது ஒரு பெரிய செயல்முறை.. அந்த செயல்முறைகள் எல்லாம் தாமதாக நடந்தததால் தான் நிறுவனங்கள் ஆந்திராவுக்கு சென்றுள்ளன.. அதற்கான தேதியுடன், எதற்காக நிறுவனங்கள் ஆந்திராவுக்கு சென்றன என்ற அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளன.. சட்டப்பேரவையில் இதுகுறித்து கேட்கட்டும்.. நான் பதில் சொல்ல தயார்..
டி.ஆர்.பி ராஜா இன்னும் தொழில்துறை அமைச்சராகவே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.. அவரை வேண்டாம் என்று சொல்லி தான் மக்கள் முடிவெடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.. அதை முதலில் அவர் ஏற்றுக்கொள்ளட்டும்.. நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி.. எங்களுக்கான மரியாதையையும் மக்களுக்கான மரியாதையையும் கொடுங்கள்.. அவர்கள் மக்களையே அவமதிக்கும் வேலையை தான் செய்துகொண்டு இருக்கின்றனர்.. “ என்று தெரிவித்தார்..



