fbpx

Alert: இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி உயரும்…!

தமிழகத்தில் இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 30-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும்.

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 77 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

JNU பல்கலை தேர்தலில் ABVP தோல்வி...! 2,598 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற இடதுசாரி அமைப்பு...!

Mon Mar 25 , 2024
நாட்டின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தலைவர், செயலாளர், துணை தலைவர், துணை செயலாளர் ஆகிய பதவிகளை இடதுசாரி மாணவர் அமைப்பு கைப்பற்றியது. கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த தேர்தல் மீண்டும் நடைபெற்ற நிலையில், பாஜக மற்றும் RSS அமைப்பின் மாணவர் அமைப்பான ABVP போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் (JNUSU) மூன்று பதவிகளை இடதுசாரிக் […]

You May Like