Flash : சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுப்பு.. அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு..!

admk mlas

தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது.. அப்போது மேகதாது விவகாரத்தில் உரிமை மீறல் பிரச்சனை குறித்து பேச அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.. ஆனால் அப்போது அவரின் மைக் அணைக்கப்பட்டது.. அதே போல் திமுக எம்.எல்.ஏ. எ.வ வேலு பேசுவதற்கு அனுமதி கோரிய போது மைக் அணைக்கப்பட்டது. அதே போல் திருவள்ளூரில் நடந்த அமோனியா வாயுக் கசிவு குறித்து பேசவும் அனுமதி மறுக்கப்பட்டது..


தொடர்ந்து பேசிய சபாநாயகர் “ உரிமை மீறல் பிரச்சனை குறித்து பேச வேண்டும் என்னிடம் மனு அளித்தார்கள்.. மனு பரிசீலனையில் உள்ளது.. இன்று அவை முடிவதற்குள் நேரம் தருகிறேன்.. உடனே பேச அனுமதிக்க வேண்டும் என்று யாரும் என்னை கட்டாயப்படுத்த முடியாது..” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்..

பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.. இபிஎஸ் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.. அமைதியாக வெளியேறுமாறு சபாநாயகர் கூறிய போதும் கூச்சல் அதிகமாக இருந்ததால் அவர்களை வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார்..

Read More : இந்தியாவின் 3-வது பணக்கார முதல்வர்..! CM விஜய்யின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..! ஷாக் ஆகாம படிங்க..!

RUPA

Next Post

54 பேர் காயம், 18 பேர் மாயம்..! கத்தார் எரிவாயு ஆலையில் பயங்கர வெடிப்பு..!

Mon Jun 22 , 2026
கத்தாரின் ராஸ் லஃப்பான் (Ras Laffan) தொழிற்பேட்டையில் உள்ள பர்சான் (Barzan) எரிவாயு ஆலையில் ஏற்பட்ட பெரும் வெடிப்பு மற்றும் அதைத் தொடர்ந்த தீ விபத்து, நாட்டின் மிக முக்கியமான எரிசக்தி நிலையங்களில் ஒன்றில் அவசரக்கால நடவடிக்கைகளைத் தூண்டியது. இச்சம்பவத்தில் குறைந்தது 54 பேர் காயமடைந்தனர் மற்றும் 18 பேர் காணாமல் போயுள்ளனர். ஆலையில் செயல்பாடுகள் தொடங்கப்பட்டபோது இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக ‘கத்தார் எனர்ஜி’ (QatarEnergy) நிறுவனம் உறுதிப்படுத்தியது. அவசரக்கால […]
qatar plant

You May Like