Flash : குட்நியூஸ்.. தங்கம் விலை அதிரடி சரிவு..! நகை வாங்க காத்திருந்தவர்கள் ஹேப்பி..!

gold jewelery

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.40 குறைந்து ரூ.13,560-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ. 320 குறைந்து ரூ.1,08,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

RUPA

Next Post

“ ஷூட்டிங்கில் இருந்து நேரா இங்க வரல.. நடிகன் கட்சி என்று நக்கல் செய்கின்றனர்.. மனதை விட்டு நீங்காத வலிகள் உள்ளன..” சட்டப்பேரவையில் விஜய் உருக்கம்..!

Tue Jun 23 , 2026
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் ஜோசப் விஜய் உரை பதிலுரை ஆற்றி வருகிறார்.. அப்போது பேசிய அவர் “ நிரந்தரமாக என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி. இங்கு ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி.. எதிர்த்து பேசினால் தான் எதிர்க்கட்சி என்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் […]
vijay assembly

You May Like