“ ஷூட்டிங்கில் இருந்து நேரா இங்க வரல.. நடிகன் கட்சி என்று நக்கல் செய்கின்றனர்.. மனதை விட்டு நீங்காத வலிகள் உள்ளன..” சட்டப்பேரவையில் விஜய் உருக்கம்..!

vijay assembly

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் ஜோசப் விஜய் உரை பதிலுரை ஆற்றி வருகிறார்.. அப்போது பேசிய அவர் “ நிரந்தரமாக என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி.


இங்கு ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி.. எதிர்த்து பேசினால் தான் எதிர்க்கட்சி என்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி..

ஷூட்டிங்கில் இருந்து நேரடியாக இங்கு வந்ததை போல் இமேஜை கிரியேட் செய்கிறார்கள்.. அது ரீல் தான் ரியல் கிடையாது.. சினிமாவில் ஒரு சாதாரண நடிகராக என் பயணத்தை தொடங்கினேன்.. பின்னர் கடுமையாக உழைத்து முன்னேறினேன்.. சினிமாவில் நான் முன்னேறியதற்கு தமிழக மக்களின் அரவணைப்பும் காரணம்.. 190களில் ரசிகர் மன்றமாக இருந்த போதே மக்கள் நலப் பணிகளை செய்தோம்.. இலங்கை தமிழர் நலனுக்காக உண்ணாவிரத போராட்டம் இருந்தோம்.. நமது மக்கள் நலப் பணிகளை பல வழிகளில் மேற்கொண்டோம்.. திரைப்படங்களில் ஊழலுக்கு எதிராக பேசினோம். சமூக நீதி பற்றி பேசினோம். அரசியல் பற்றி பேசினோம்..

2024-ல் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி, விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டாஇ நடத்தினோ.. 2 பெண் தலைவர்களை கொள்கை தலைவர்களாக அறிவித்த ஒரே கட்சி தவெக தான்.. பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை தவிர, அவரின் மற்ற கொள்கையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தோம்..

நமது கொள்கை எதிரி யார், அரசியல் எதிரி யார் என்று வெளிப்படையாக அறிவித்தோம்.. எல்லோரும் கட்சி ஆரம்பித்து விட்டு தான் ஒவ்வொரு வீட்டுக்கும் செல்வார்கள்.. ஆனால் நாம் ஒவ்வொரு வீட்டுக்கும் போன பிறகு தான் கட்சியையே தொடங்கினோம்..

2026 தேர்தலில் கூட்டணியே இல்லாமல் தனியா நின்றோம்.. நாம் 35% வாக்குகளை வாங்கினோம்.. 1 கோடியே 72 லட்சம் வாக்குகளுடன் தனிப்பெரும் கட்சியாக உருவானோம்.. நம் கட்சியை நடிகன் கட்சி என்று நக்கல், நையாண்டியாக பேசுகின்றனர்.. ஆதரவு கட்சிகளின் ஆதரவுடன் ஆளுங்கட்சியாக உருவெடுத்துள்ளோம்..

ஆனால் ஆளுங்கட்சியாக அவ்வளவு எளிதில் வந்துவிடவில்லை.. நமது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு எந்த தலைவருக்கும் இல்லாத வகையில் தடைகள் விதிக்கப்பட்டது.. கரூர் சம்பவத்தில் 41 பேர் இறந்ததை எல்லாம் எப்படி சொல்வது என்றே தெரியவில்லை.. அந்த வலி எல்லாம் என்றைக்கும் நம் மனதை விட்டு நீங்காது.. அதுவும் நம் மீதே பழி போட்ட கொடுமை எல்லாம் வேற லெவல். எதற்கு அப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை.. அரசியல் என்றால் இவ்வளவு கொடூரமாக இருக்க வேண்டுமா என்ன..? இந்த விஜய் மக்களுக்காக எதையும் தாங்க தயாராகி விட்டான்.. மக்கள் பலத்தால், தோழர்கள் பலம் எனது பலம்..” என்று தெரிவித்தார்..

RUPA

Next Post

தவெக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களுக்கு மக்கள் பணத்தை சுருட்ட தெரியாது.. ஊழல் செய்ய தெரியாது.. முதல்வர் விஜய் பேச்சு..!

Tue Jun 23 , 2026
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் ஜோசப் விஜய் உரை பதிலுரை ஆற்றி வருகிறார்.. அப்போது பேசிய அவர் “ தமிழ்நாட்டில் ஊழல் இல்லாத, பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சியை கொடுப்போம்.. கடந்த ஆட்சியில் நடந்த நிதி மேலாண்மை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட்டோம்.. அவர்கள் ஆட்சியால் தமிழக மக்களுக்கு தொல்லையோ தொல்லை தான்.. இப்படி ஆட்சி நடத்தி விட்டு தவெக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆட்சி […]
vijay assembly n

You May Like