காஷ்மீரில் கடந்த ஒரு மாதத்தில் பா.ஜ.கவில் 27 ஆயிரம் பேர் இணைந்தனர்.
பாஜக மூத்த தலைவரும், ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக்கிற்கான மாநில பொதுச் செயலாளருமான அசோக் கவுல், ஜம்மு காஷ்மீரில் கடந்த ஒரு மாதத்தில் 27,000க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது யூனியன் பிரதேசத்தில் கட்சியின் அடிமட்ட விரிவாக்கத்தை மேம்படுத்துகிறது என கூறியுள்ளார்.
இந்த புதிய உறுப்பினர் சேர்க்கைகள் பாஜகவின் பலத்தை அதிகரிக்கும் என்றும், வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவைத் திரட்டி, தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ஜம்மு காஷ்மீரில் இந்தி கூட்டணி பாஜகவின் செல்வாக்கைக் குறைக்காது, பிராந்தியத்தில் கட்சியின் வலுவான இருப்பு மற்றும் சாதனைகளை மேற்கோள் காட்டி வாக்கு சேகரிப்போம் என்றார்.