பத்மஸ்ரீ விருது பெற்ற புகழ்பெற்ற விஞ்ஞானி மாரடைப்பால் காலமானார்..

புகழ்பெற்ற விஞ்ஞானியும், இன்ஸ்டிடியூட் ஆப் லைஃப் சயின்சஸ் (ஐஎல்எஸ்) இயக்குநருமான டாக்டர் அஜய் பரிதா நேற்று கவுகாத்தியில் காலமானார்..

பத்மஸ்ரீ விருது பெற்ற பரிதாவுக்கு 58 வயது. அசாம் மாநிலத் தலைநகரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மரணமடைந்தார். அவர் கவுகாத்தியில் ஒரு மாநாட்டில் கலந்து கொள்ள இருந்தார். அஜய் பரிதாவின் அகால மறைவுக்கு ஒடிசா ஆளுநர் பேராசிரியர் கணேஷி லால், ஆந்திரப் பிரதேச ஆளுநர் பிபி ஹரிசந்தன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் பல உயரதிகாரிகள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தனது ட்விட்டர் பதிவில், “பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானியும், இன்ஸ்டிடியூட் ஆஃப் லைஃப் சயின்ஸ் (ஐஎல்எஸ்) இயக்குநருமான புவனேஸ்வர் அஜய் பரிதா காலமானதை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். துக்கத்தின் இந்த நேரத்தில் அவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்…

டாக்டர் அஜய் பரிதாவின் மரணத்தை உறுதிப்படுத்திய முன்னாள் டிஎம்இடி பேராசிரியர் சிபிகே மொஹந்தி, கொரோனா காலக்கட்டத்தில் மக்களுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டினார். டாக்டர் அஜய் பரிதாவின் மேற்பார்வையின் கீழ், முறையான சிகிச்சைக்கு அவசியமான கோவிட் மாறுபாடுகளைக் கண்டறிய ILS மரபணு வரிசைமுறையை நடத்தியது. அஜய் பரிதா ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பகபன்பூர் கிராமத்தில் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

அடுத்த 3 மணி நேரத்தில்.. தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்..

Wed Jul 20 , 2022
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது நாடு முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ளது.. மகராஷ்டிரா, அசாம், டெல்லி, ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. இதே போல் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி போன்ற தென் மாநிலங்களிலும் இடைவிடாது மழை பெய்து வருகிறது. சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதாலும், தாழ்வான பகுதிகளில் வெள்ள்நீர் புகுந்துள்ளதாலும், பொதுமக்களின் இயல்பு […]

You May Like