தலைவர் 173 படத்தின் பெயர் “தர்மன்”..! முதன்முறையாக டாக்டர் லுக்கில் ரஜினிகாந்த்..! மாஸான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!

rajini dharman

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலும் தவிர்க்க முடியாத நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் தான்.. இந்தியாவில் எத்தனையோ உச்ச நடிகர்கள் இன்னும் கோலோச்சி வருகின்றனர்.. ஆனால் 75 வயதிலும் ஒரு நடிகர், 25 வயதில் இருக்கும் அதே துள்ளல், ஸ்டைலுடன் வலம் வர முடியும் என்றால் அது நிச்சயம் ரஜினி மட்டுமே.. தனது தனித்துவமான ஸ்டைல் மற்றும் நடிப்பாலும் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார் ரஜினி..


எத்தனை வயதானாலும் ரஜினிக்கு இருக்கும் அந்த ஈர்ப்பு வேறு எந்த நடிகருக்கும் இல்லை என்பதே உண்மை.. அதனால் தான் ரஜினி படம் எப்போது திரைக்கு வந்தாலும் அவரின் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து விடுகின்றனர்.. ரஜினி படம் என்றாலே 100 கோடி வசூல் கன்ஃபார்ம் என்பதால் அவர் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றும் அழைக்கப்படுகிறார்..

அந்த வகையில் கடந்த ஆண்டு ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படம் வெளியானது.. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியில் வெற்றிப் படமாகவே அமைந்தது.. இந்த படம் சுமார் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார்.. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…

இதை தொடர்ந்து கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிக்கும் படத்தில் ரஜினி நடிக்க உள்ளார்.. தலைவர் 173 என்று அழைக்கப்படும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது..

இந்த படத்தை சுந்தர் சி இயக்க உள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது.. எனினும் தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி அறிவித்தார்.. இதை தொடர்ந்து டாப் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்குவார் என்று கூறப்பட்டது..

ஆனால் அவரும் மாற்றப்பட்டார்.. தற்போது ஓ மை கடவுளே, டிராகன் படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் நடிகர் ரஜினிகாந்த் – அஷ்வத் மாரிமுத்து கூட்டணியில் உருவாகும் படத்தின் பெயர் இன்று வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது..

இந்த நிலையில் நடிகர் ரஜினியின் 173வது படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.. ராஜ்கமல் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. தர்மமே வெல்லும் என்ற கேப்ஷனையும் தயாரிப்பு நிறுவனம் பதிவிட்டுள்ளது..

அதன்படி இந்த படத்திற்கு தர்மன் என்று பெயரிடப்பட்டுள்ளது.. இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. கையில் கத்தியுடன் டாக்டர் கெட்டப்பில் ரஜினிகாந்த் மாஸ் லுக்கில் இருக்கிறார்.. ரஜினிகாந்த் இந்த படத்தில் முதன்முறையாக டாக்டராக நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.. இந்த புதிய போஸ்டர் மூலம் இந்த தகவல் உறுதியாகி உள்ளது.. ரஜினியின் இந்த படம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், அவரின் ரசிகர்கள் படத்திற்காக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்..

Read More : இதெல்லாம் முதல்வர் விஜய்க்கு தெரிந்து நடக்கிறதா? அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. அன்புமணி வலியுறுத்தல்..!

RUPA

Next Post

“CM நிகழ்ச்சியில் தயவு செஞ்சு கரண்ட்டை மட்டும் கட் பண்ணிடாதீங்க சார்.. அசிங்கமா போய்டும்..!” விஜய் அரசை பங்கம் செய்த அதிமுக ஐடி விங்..!

Wed Jun 24 , 2026
சென்னை கலைவாணர் அரங்கில் 401 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் இன்று வழங்கினார்.. எரிசக்தி துறையில் 383 உதவி பொறியாளர்கள், 18 உதவி கணக்கு அலுவலர்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் விஜய் வழங்கினார்.. டிஎன்பிஎஸ்சி ட்மூலம் தேர்வான 401 பேருக்கு பணி நியமன ஆணையை முதல்வர் விஜய் வழங்கினார்.. இதனிடையே இந்த நிகழ்ச்சி தொடர்பாக, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தமிழ்நாடு மின்சார […]
eb issueadmk it wing

You May Like