சென்னை கலைவாணர் அரங்கில் 401 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் இன்று வழங்கினார்.. எரிசக்தி துறையில் 383 உதவி பொறியாளர்கள், 18 உதவி கணக்கு அலுவலர்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் விஜய் வழங்கினார்.. டிஎன்பிஎஸ்சி ட்மூலம் தேர்வான 401 பேருக்கு பணி நியமன ஆணையை முதல்வர் விஜய் வழங்கினார்..
இதனிடையே இந்த நிகழ்ச்சி தொடர்பாக, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உதவி செயற் பொறியாளருக்கு நேற்று முன் தினம் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்.. அதில் “ சென்னை கலைவாணர் அரங்கத்தில் 24.06.2026 காலை 10:00 மணியளவில் “தமிழ்நாடு மின்சார வாரியம்” சார்பாக “379 உதவி பொறியாளர்கள் மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா” மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் மின் தடை ஏதும் ஏற்படாத வண்ணம் பணிகளை மேற்கொள்ள ஆவண செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்திருந்தார்..
இந்த நிலையில் இந்த கடிதத்தை பதிவிட்டு, அதிமுக ஐடி விங், தவெக அரசையும், முதல்வர் விஜய்யையும் விமர்சித்துள்ளது.. தனது ட்விட்டர் பக்கத்தில் “ மின்சார கண்ணா அதிரடி படை on the floor! தயவு செஞ்சு கரண்ட்டை மட்டும் கட் பண்ணிடாதீங்க சார்… ஒரே அசிங்கமா போய்டும் சார்..!! இப்படிக்கு ப்ரோவின் அரசு..” என்று அதிமுக ஐடி விங் பதிவிட்டுள்ளது.. மேலும் மின்சார டிரான்ஸ்ஃபார்மர் பெட்டிக்கு தமிழ்நாடு காவல்துறை பாதுகாப்பு வழங்குவது போன்ற படத்தையும் கிண்டலாக பதிவிட்டுள்ளது.. அதிமுக ஐடி விங்கின் இந்த பதிவு இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது..



