பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இருவருக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர பாமக நிர்வாகிகள் சார்பில் பல சமசர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது..
ஆனால், என் மூச்சிருக்கும் வரை நான் தான் தலைவர் என்று திட்டவட்டமாக ராமதாஸ் கூறி வருகிறார்.. மேலும் அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.. மேலும் பாமகவின் செயல்தலைவராக தனது மகள் ஸ்ரீகாந்தி செயல்படுவார் என்று ராமதாஸ் சமீபத்தில் அறிவித்திருந்தார்..
சமீபத்தில் பாமக தலைமை யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக ராமதாஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தது.. இந்த சூழலில் பாமக தலைவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.. தலைவர் பதவியில் முரண்பாடுகள் தொடர்பாக நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்திருந்தது.. இதை தொடர்ந்து ராமதாஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.. இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. பாமக கட்சி சின்னம் தொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன..
இந்த நிலையில் தைலாபுரம் தோட்டத்து வீட்டில் ராமதாஸை அன்புமணி சந்தித்து பேசினார்.. தந்தை ராமதாஸின் திருமண நாளை முன்னிட்டு குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து அன்புமணி ஆசீர்வாதம் பெற்றார்.. நீண்ட இடைவெளிக்க்கு பின்னர் தனது தந்தை ராமதாஸ் உடன் அன்புமணி சந்திப்பு நிகழ்ந்துள்ளது.. இந்த சந்திப்பின் மூலம் தந்தை – மகன் இடையேயான பூசல் முடிவுக்கு வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.. 2 ஆண்டுகளாக இந்த மோதல் நீடித்த நிலையில் தற்போது முடிவுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது..



