இரட்டை இலை சின்னத்தை தனது அணிக்கி ஒதுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால், மொத்தமாக முடக்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மீண்டும் மனு அளித்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு இரட்டை இலை சின்னத்தை வழக்கக் கூடாது என்றும் அந்த மனுவில் ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால், தனது ’வாளி’ சின்னம் ஒதுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : BREAKING | சீமான் அதிர்ச்சி..!! தேர்தல் நேரத்தில் கட்சியில் இருந்து முக்கிய செயலாளர் விலகல்..!!