விருதுநகர் மாவட்டத்தில் இன்று சிலம்ப வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.. இந்த விழாவில் இடம்பெற்றிருந்த பேனரில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவின் பெயர் முதலில் போடப்பட்டிருந்தது.. 2வதாக சமூக நலன் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பெயர் இடம்பெற்றிருந்தது..
இந்த பேனரை பார்த்து கடுப்பான அமைச்சர் ஜெகதீஸ்வர், இந்த விழாவில் ச்சர் கீர்த்தனாவின் பெயரை முதலில் போட்டது ஏன் என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆட்சியரிடம் கேள்வி எழுப்பினார்..
மேலும் “ இந்த நிகழ்வுக்கு வராத ஒரு அமைச்சரின் பெயரை ஏன் முதலில் போட்டிருக்கிறீர்கள்.. இது தவறு.. இது குறித்து நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன்.. ஆனால் மீண்டும் மீண்டும் இந்த தவறை செய்து வருகிறார்கள்.. நான் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளட்டுமா..? இல்லை செல்லட்டுமா.. அதிகாரிகள் இந்த போக்கை உடனே நிறுத்த வேண்டும்.. துறை மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற ரீதியில் தனது பெயரே முதலில் வர வேண்டும்..” என்றும் அவர் தெரிவித்தார்..
இதனால் அந்த விழாவில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.. அரசு விழாவில் தனது பெயரை முதலில் ஏன் போடவில்லை என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி மாவட்ட ஆட்சியரிடம் வினவிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக ஜெகதீஸ்வரி இருந்து வருகிறார். தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருக்கிறார்.. கடந்த சில நாட்களாகவே விருதுநகர் மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர் கீர்த்தனா இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.. இதனால் அமைச்சர் கீர்த்தனாவின் பேனர் கிழிக்கப்பட்ட சம்பவங்கள் அரங்கேறின.
விருதுநகர் தனது சொந்த ஊர் என்பதால், அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழில் தனது பெயர் இருக்க வேண்டும் என்று அமைச்சர் கீர்த்தனா தரப்பு அழுத்தம் கொடுத்து வருகிறது.. ஆனால் கீர்த்தனாவுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பொறுப்பு கொடுத்தாலும், அவர் இன்னும் அந்த மாவட்டம் பக்கம் செல்லவே இல்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.. இதனால் அமைச்சர் கீர்த்தனா மீது பல்வேறு தரப்பு நிர்வாகிகளும் அதிருப்தியில் இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.



