“காலக்கொடுமை.. வரலாற்றிலேயே தமிழ்நாடு முதலமைச்சர் இப்படி செய்வது இதுதான் முதல் முறை..” விஜய்யை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

cm vijay marathon

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற லட்சியத்தை கொண்டு சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இன்று சென்னையில் பிரம்மான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.. “Start Run, Stop Drugs” என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இந்த ஓட்டத்தை முதல்வர் விஜய் நேரில் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.


அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், பள்ளி – கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்லாயிக்கணக்கான பொதுமக்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.. மாரத்தான் ஓட்டம் தொடங்குவதற்கு ந்பு, சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே பிரத்யேக நிகழ்ச்சி பொதுமேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடையில் வைக்கப்பட்டிருந்த Anti Drug Run என்ற பிரம்மாண்ட பிரச்சார பேனரில் முதல்வர் தனது கையால் Start Run, Stop Drugs என்று எழுதி அதன் கீழே Sporta-ah Edu, Drugs-ah vidu  என்று Tanglish-ல் எழுதி பிரியமுடன் விஜய் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் முதல்வர் விஜய் Tanglish-ல் எழுதியதை இணையத்தில் பலரும் விமர்சித்து வருகின்றனர். பயனர் ஒருவர் “ வரலாற்றிலேயே தமிழ்நாடு முதலமைச்சர் Tanglish – ல எழுதுவது இதுதாண்டா முதல் முறை.. காலக்கொடும.” என்று பதிவிட்டுள்ளார்.

அதே போல் மற்றொரு பயனர் “ என்னடா கொடுமை இது. நம்ம தமிழ்நாட்டு முதலமைச்சர் தங்கிலீஷ்-ல எழுதிட்டு இருக்காரு.. “Sports ah Edu , Drugs ah Vidu”

ஏன் ப்ரோ உங்களுக்கு தமிழ் தெரியாதா? இப்போ புரியுது ஏன் தமிழ்த்தாய் வாழ்த்து விஷயத்தில் அலட்சியமாக இருந்தீர்கள் என்று.” என்று பதிவிட்டுள்ளார்.

English Summary

Many people on the internet are criticizing what Chief Minister Vijay wrote in Tanglish.

RUPA

Next Post

Flash : ஒரே நாளில் ரூ.5,000 உயர்வு.. மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம், வெள்ளி விலை..!

Fri Jun 26 , 2026
In Chennai today, the price of ornamental gold has risen by ₹640 per sovereign, while the price of silver has increased by ₹5,000 per kilogram.
Gold Rate today 4

You May Like