2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன.. ஆனால் தேர்தல் முடிவுகளுக்கு பின் முதல் ஆளாக காங்கிரஸ் திமுக கூட்டணியை முறித்துக் கொண்டு தவெகவுக்கு ஆதரவு வழங்கியது.. மேலும் அடுத்து நடைபெற உள்ள உள்ளாட்சி நாடாளுமன்ற தேர்தலிலும் தவெக உடன் கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் அறிவித்தது..
இதையடுத்து விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் தவெக ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவு தந்தன.. பின்னர் தவெக அழைப்பு விடுத்ததன் பேரில் விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் தவெக அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளன..
இதனிடையே திமுக கூட்டணி ஒன்றே இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் தெரிவித்தது.. இதையடுத்து திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர முடியாத நிலை உள்ளதாக சிபிஐ மாநில செயலாளர் வீர பாண்டியன் தெரிவித்துள்ளார்..
இந்த நிலையில் திமுக கூட்டணியில் இருந்து மதிமுகவும் விலகி உள்ளது.. சென்னை அண்ணா நகரில் வைகோ தலைமையில் நடைபெற்ற மதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.. திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேர்தல் வரும் போது தவெக உடன் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



