ஸ்டாலின் சார் என்ன தான் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டாலும்.. திமுக 100% துடைத்தெறியப்படப் போவது உறுதி.. தவெக ஐடி விங் பதிலடி..!

stalin vijay

அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.. இதையடுத்து அவரின் ஆதரவாளர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நேற்று சென்னை வானகரத்தில் நடைபெற்றது..


இந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் மு.க ஸ்டாலின் “ புதிய அரசு பொறுப்பேற்ற ஒரு மாதத்திற்குள்ளேயே தமிழகத்தின் நிலை படுகுழிக்குள் சென்றுவிட்டது. தொழில் நிறுவனங்கள் புதிய ஆட்சியை நம்பி முதலீடு செய்ய தயங்குகின்றனர். அதனால் தொழில் முதலீடுகள் வேறு மாநிலங்களுக்கு செல்கின்றன.

மற்றொருபுறம் தொடர் மின்வெட்டு, விவசாயிகள் போராட்டம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை என்று பிரச்சனைகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். ஆனால் எதை பற்றியும் கவலைப்படாமல் ஆட்சியாளர்கள் திசை திருப்பும் வேலைகளை செய்து வருகின்றனர்.. இவர்களின் டெக்னிக் மக்களுக்கு புரிய ஆரம்பித்து விட்டது.. ஓட்டு போட்டவர்களும் கஷ்டப்படுகிறார்கள்.. ஓட்டுப்போடாதவர்களு கஷ்டப்படுகின்றனர்..

எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்.. இந்த இக்கட்டான சூழலில் மக்களுக்கு துணையாக திமுக இருக்கும். தோல்வியைக் கண்டு திமுக அஞ்சப்போவதில்லை.. 100% நாம் ரெடியாக இருக்க வேண்டும்.. திமுக வெற்றிக்கு இப்போதிருந்தே உழைக்க தொடங்குவோம்..” என்று தெரிவித்தார்..

இந்த நிலையில் மு.க. ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு தவெக ஐடி விங் பதிலடி கொடுத்துள்ளது. இனி வருகின்ற ஒவ்வொரு தேர்தலிலும் திமுக 100% சதவிகிதம் துடைத்தெறியப்படப் போவது உறுதி என்று தவெக ஐடி விங் கூறியுள்ளது.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் “ எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்தார் திமுகவில் இருந்தார் என்று கொளத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. திரு.ஸ்டாலின் அவர்கள் பெருமை பொங்க பேசினார். தி.மு.க.வால்தான் முதன்முதலில் எம்.எல்.ஏ. ஆனார். அதுதான் வரலாறு என்றெல்லாம் சொன்னவர், பிறகுதான் தனிக்கட்சி கண்டார் என்றும் தொடர்ந்து சொன்னார்.

ஆனால், தன் வாழ்நாள் எதிரியே தி.மு.க.தான் என்று கடைசிவரை வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர். தி.மு.க.வை ஒரு தீயசக்தி என்று அன்று சொன்னவர் எம்.ஜி.ஆர். தான் உயிரோடு இருக்கும்வரை தி.மு.க.வைக் கூப்பிலேயே உட்கார வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். என் நண்பர் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் இருந்து வந்ததும் ஆட்சியைத் திருப்பித் தந்துவிடுகிறேன். அதுவரை என்னிடம் ஆட்சியைக் கொடுங்கள் என்று தி.மு.க.வைக் கெஞ்ச வைத்தார் எம்.ஜி.ஆர். இதுவும் வரலாறுதான் என்ற உண்மையைச் சொல்வாரா ஸ்டாலின் சார்?.

சட்டம் ஒழுங்கு டிஜிபியை நியமிக்காமல் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கையே சந்தி சிரிக்க வைத்தவரும் இன்றைய நிலைக்கு ஆழமாய் விதை போட்டவரும் ஸ்டாலின் சார்தான். ஆனால், எல்லாவற்றையும் மறந்துவிட்டு, இன்று ஏதோ தன்னால் தமிழகம் பாழ்படவே இல்லை என்பதுபோலப் பேசித் தன் நகைச்சுவைத் திறனைக் காட்டுகிறார்.

இந்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம். மூன்று வருடத்தில் வரலாம். ஆறு மாதத்தில்கூட தேர்தல் வரலாம் என்று பொறாமையும் விரக்தியும் பொங்கப் பேசுகிறார் ஸ்டாலின் சார். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருப்பதை மறந்துவிட்டு வாய்க்கு வந்ததைப் பேசுகிறார். மக்கள் தீர்ப்பை அவமதிப்பு செய்கிறார். ஆட்சி அதிகாரத்தை இழந்த விரக்தியில் விம்முகிறார். வெடிக்கிறார். துடிக்கிறார்.

ஸ்டாலின் சார் என்னதான் ஆலாய்ப் பறந்தாலும் அங்கலாய்த்தாலும் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டாலும் இனி வருகின்ற ஒவ்வொரு தேர்தலிலும் திமுக 100% துடைத்தெறியப்படப் போவது உறுதி.” என்று தெரிவித்துள்ளது.

RUPA

Next Post

Flash : வாரத்தின் முதல் நாளே குட்நியூஸ்..! தங்கம் விலை அதிரடி சரிவு..! எவ்வளவு தெரியுமா..?

Mon Jun 29 , 2026
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
gold jewelery

You May Like