Flash : வாரத்தின் முதல் நாளே குட்நியூஸ்..! தங்கம் விலை அதிரடி சரிவு..! எவ்வளவு தெரியுமா..?

gold jewelery

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.70 குறைந்து ரூ.13,300-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.560 குறைந்து குறைந்து ரூ.ரூ.1,06,400 க்கு விற்பனை செய்யப்படுகிறது.. வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எனினும் இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.245க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.2.45 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

Read More : ஸ்டாலின் சார் என்ன தான் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டாலும்.. திமுக 100% துடைத்தெறியப்படப் போவது உறுதி.. தவெக ஐடி விங் பதிலடி..!

RUPA

Next Post

தொடைநடுங்கி முதல்வரே? 'Thug Life' அமைச்சர்களின் வண்டவாளங்களைத் தோலுரித்தால் ஏன் போலீஸ் பின்னால் ஒளிகிறீர்கள்..? திமுக ஐடி விங் கண்டனம்..!

Mon Jun 29 , 2026
அமைச்சர் சரத்குமார் போதைப் பொருள் பயன்படுத்துவது போன்ற ம் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.. இதை தொடர்ந்து குடும்பத்துடன் வீடியோ வெளியிட்டு விளக்கமளித்த அமைச்சர் சரத்குமார் தனது குழந்தைக்கு மாத்திரையை பொடியாக்கி கொடுத்ததாகவும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். ஆனால் அவரின் விளக்கம் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. இந்த நிலையில் அமைச்சர் […]
dmk protest

You May Like