Breaking : அதிமுக Ex அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் MLA பதவியை ராஜினாமா செய்தார்..!

m.r vijayabaskar

சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுக இரண்டாக உடைந்திருந்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் 5 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்..  மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ ஜெயக்குமார், தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ சத்யபாமா, அம்பா சமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா ஆகிய 4 அதிமுக எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.. மேலும் ராஜினாமா செய்த கையோடு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்..


சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.. அவரும் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவரின் இணைப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது..

இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.. சென்னை தலைமை செயலக்கத்தில் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை தலைமை செயலகத்தில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அவரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார்..

தன்னிடம் இருந்து பறிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் பதவியை மீண்டும் தராததால் எம்.ஆர். விஜயபாஸ்கர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. அதிமுக கொள்கைப்பரவு இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கியதால் அவர் அதிருப்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர் விரைவில் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ள நிலையில், முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் என 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.. அவர் திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.. இதனால் திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. 

திருச்சி கிழக்கு, மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம், விராலிமலை என 6 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளதால் தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

Read More : தொடைநடுங்கி முதல்வரே? ‘Thug Life’ அமைச்சர்களின் வண்டவாளங்களைத் தோலுரித்தால் ஏன் போலீஸ் பின்னால் ஒளிகிறீர்கள்..? திமுக ஐடி விங் கண்டனம்..!

RUPA

Next Post

பாகற்காய் கசப்பாக இருப்பதால் அதைச் சாப்பிடாமல் தவிர்க்கிறீர்களா? இந்த உண்மைகள் தெரிந்தால் தவறாமல் சாப்பிடுவீங்க..!

Mon Jun 29 , 2026
பாகற்காய் என்ற பெயரைக் கேட்டாலே பலர் முகம் சுளிப்பார்கள். அதற்குக் காரணம் அதன் கசப்புச் சுவைதான். ஆனால், கசப்புச் சுவை கொண்டதாக இருந்தாலும், உடல் நலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் காய்கறிகளில் பாகற்காயும் ஒன்று. இதில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் (antioxidants) நிறைந்துள்ளன. அதனால்தான் ஆயுர்வேதத்தில் பாகற்காய்க்கு ஒரு சிறப்பான இடம் உண்டு. மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, உடலில் பித்தம் மற்றும் கபம் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்த பாகற்காய் […]
Bitter gourd nw

You May Like