“தொட மாட்டேன் – தொட்டா விட மாட்டேன்” என்று script-படி பொங்கிய முதல்வர்.. சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்? உதயநிதி கேள்வி..!

cm vijay udhaynidhi

சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுக இரண்டாக உடைந்திருந்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் 5 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்..  மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ ஜெயக்குமார், தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ சத்யபாமா, அம்பா சமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா ஆகிய 4 அதிமுக எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.. மேலும் ராஜினாமா செய்த கையோடு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்..


சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.. அவரும் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவரின் இணைப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது..

இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.. சென்னை தலைமை செயலக்கத்தில் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை தலைமை செயலகத்தில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அவரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார்.. எம்.ஆர். விஜயபாஸ்கரும் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்தடுத்து அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாம செய்து தவெகவில் இணைவதை எதிர்க்கக்ட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா. இந்த Sofa Model ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு extreme ஆகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது.

ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம்.

“தொட மாட்டேன் – தொட்டா விட மாட்டேன்” என்று script-படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த scene-ல், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்? SofaModel அரசின் இந்த Washing Machine அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது. திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

Read More : தவெக ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது வழக்கு! ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்..! மு.க. ஸ்டாலின் காட்டமான பதிவு..!

RUPA

Next Post

22,000 மக்கள் பாதிப்பு.. அசாமை புரட்டிப் போட்ட வெள்ளம்.. ரயில்வே பாலம் சேதம்..!

Mon Jun 29 , 2026
அசாம் மற்றும் அண்டை மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் பல நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் மழையால், அசாமின் 6 மாவட்டங்களில் 22,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; இந்த பருவமழையின் முதல் கட்ட வெள்ளம் அங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. பெருக்கெடுத்து ஓடும் ஆறுகள் மற்றும் ஆற்றங்கரையில் ஏற்பட்டுள்ள கடுமையான அரிப்பு காரணமாக ஒரு முக்கிய ரயில்வே பாலம் சேதமடைந்துள்ளது. இதனால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், மோசமடைந்து வரும் வெள்ளச் […]
assam floods

You May Like