அமைச்சர் சரத்குமார் போதைப் பொருள் பயன்படுத்துவது போன்ற ம் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.. இதை தொடர்ந்து குடும்பத்துடன் வீடியோ வெளியிட்டு விளக்கமளித்த அமைச்சர் சரத்குமார் தனது குழந்தைக்கு மாத்திரையை பொடியாக்கி கொடுத்ததாகவும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். ஆனால் அவரின் விளக்கம் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
இந்த நிலையில் அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி திமுக மாணவரணி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி சென்னை எழும்பூரில் இன்று திமுக மாணவரணியினர் மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.. அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், ஆர்ப்பாம் நடத்துவதற்கு உரிய அனுமதி பெறாததால் மேடை அமைக்க அனுமதிக்க முடியாது என்று கூறினர்.
இதையடுத்து திமுக மாணவரணி நிர்வாகிகள் – போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.. தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் காவல்துறை வாகனங்களில் ஏற்றி அழைத்து சென்றனர். சென்னையை போலவே மதுரை, நெல்லை, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களிலும் திமுக மாணவரணி போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது! த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு! முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு!
இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம் நீண்டகாலம் நீடிக்காது! அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்! “டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்!..” என்று குறிப்பிட்டுள்ளார்.
Read More : தமிழக இளைஞர்களின் எதிர்காலம், அரசின் நிர்வாக அலட்சியத்திற்குப் பலியாக அனுமதிக்கக் கூடாது – அண்ணாமலை



