திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், இன்று (ஜூலை 1) முதல் செல்போன் கொண்டு செல்லுவதற்கு தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
கோயிலுக்குள் நுழையும் அனைத்து பக்தர்களும் பாதுகாப்பு சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுவார்கள். பொதுத் தரிசனம் மற்றும் கட்டணத் தரிசன வரிசைகள் அனைத்திலும் சோதனை நடைபெறும். பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு அல்லது கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள பாதுகாப்பு வைப்பகங்களில் ஒப்படைத்துவிட்டு தரிசனத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தடையை மீறி செல்போன் கொண்டு வருபவர்களின் சாதனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, கோயிலில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த செல்போன் தடையை நீதிமன்ற உத்தரவின்படி முழுமையாக அமல்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Also Read: வாஷிங் மெஷின்ல துவச்ச துணி அழுக்கா இருக்கா? காரணம் இது தான்!



