வாஷிங் மெஷின்ல துவச்ச துணி அழுக்கா இருக்கா? காரணம் இது தான்!

images 4

இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பைவிட இயந்திரங்களின் உதவியோடு அதிகமாக வாழும் நிலை உருவாகியுள்ளது. அந்த அளவுக்கு தொழில்நுட்ப சாதனங்கள் நம் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றில் வாஷிங் மெஷின் ஒவ்வொரு வீட்டிலும் அத்தியாவசிய சாதனமாக மாறியுள்ளது.


இன்றைய நிலையில் பெரும்பாலான வீடுகளில் துணிகள் முழுமையாக வாஷிங் மெஷினில் துவைக்கப்படுகின்றன. இதனால் நேரம் மற்றும் உழைப்பு குறைவது உண்மைதான். இருப்பினும், சரியான முறையில் பயன்படுத்தாவிட்டால் துணிகள் விரைவில் சேதமடைவதுடன், மின்சாரச் செலவும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

முழுமையாக கையால் துவைக்கும் பழைய முறைக்கு திரும்புவது சாத்தியமற்றதாக இருந்தாலும், சில எளிய மாற்றங்களை பின்பற்றுவதன் மூலம் துணிகளின் ஆயுளை நீட்டித்து, மின்சாரச் செலவையும் குறைக்க முடியும். ஆம், உண்மை தான் அந்த சிறிய வழிமுறைகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படியுங்கள்..

மெஷினில் அதிக அளவில் துணிகளை நிரப்புவது சுத்தம் குறைவதற்கு காரணமாகும். அதேபோல் மிகக் குறைவாக துவைப்பதும் தண்ணீர் மற்றும் மின்சாரத்தை வீணாக்கும். வெள்ளை, நிறமுள்ள மற்றும் கனமான துணிகளை தனித்தனியாக பிரித்து துவைப்பது சிறந்தது. கருப்பு மற்றும் அடர் நிற ஆடைகள் அடிக்கடி துவைத்தால் நிறம் மங்கலாம். இதைத் தவிர்க்க அவற்றை உள்புறமாக மாற்றி துவைப்பது நல்லது.

அதிக டிடர்ஜென்ட் பயன்படுத்தினால் துணிகளில் சோப்பு படிந்து கெட்டியாகும். மேலும் மெஷினின் உள்ளேயும் கழிவுகள் தேங்கி செயல்திறன் குறையும். எனவே பரிந்துரைக்கப்பட்ட அளவையே பயன்படுத்த வேண்டும். அன்றாட பயன்பாட்டு ஆடைகளுக்கு நீண்ட நேர சுழற்சி தேவையில்லை. 15 முதல் 30 நிமிட வாஷ் மோட் போதுமானது. இது மின்சாரம், தண்ணீர் மற்றும் நேரத்தைச் சேமிக்க உதவும்.

ஜீன்ஸ், ஜாக்கெட்டுகள் போன்றவற்றின் ஜிப்புகளை மூடி துவைப்பது மற்ற துணிகள் சேதமடையாமல் காக்கும். சட்டை பட்டன்களை திறந்து துவைப்பது அவை உடையாமல் இருக்க உதவும். மெஷின் ஃபில்டரில் தூசி, பஞ்சு மற்றும் முடி சேர வாய்ப்பு உள்ளது. மாதத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்தால் மெஷின் சிறப்பாக செயல்படும். இதை சரியாக பராமரிக்காததால் தான் பல நேரங்களில் நாம் மெஷினில் துவைத்த துணி அழுக்காகவே இருக்கிறது.

மாதம் ஒருமுறை டப் கிளீன் ஆப்ஷனை இயக்குவது மூலம் உள்ளே தேங்கும் கிருமிகள் மற்றும் துர்நாற்றம் நீங்கும். துவைப்பு முடிந்ததும் கதவை சிறிது நேரம் திறந்து வைத்தால் ஈரப்பதம் குறைந்து பூஞ்சை உருவாகாது. மெஷினில் நீண்ட நேரம் துணிகளை வைத்தால் துர்நாற்றம் ஏற்படும். எனவே உடனடியாக எடுத்துக் காயவைக்க வேண்டும்.

Also Read: பெற்றோர் செய்யும் காரியமா இது? இரவில் 16 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்!

Saranya

Next Post

இன்று முதல் செல்போனுக்கு தடை..! முருகன் கோயிலில் அதிரடி…

Wed Jul 1 , 2026
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், இன்று (ஜூலை 1) முதல் செல்போன் கொண்டு செல்லுவதற்கு தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. கோயிலுக்குள் நுழையும் அனைத்து பக்தர்களும் பாதுகாப்பு சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுவார்கள். பொதுத் தரிசனம் மற்றும் கட்டணத் தரிசன வரிசைகள் அனைத்திலும் சோதனை நடைபெறும். பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு அல்லது கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள பாதுகாப்பு வைப்பகங்களில் ஒப்படைத்துவிட்டு தரிசனத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடையை மீறி செல்போன் […]
thiruchendur 1

You May Like