“பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்… தட்டுல ஒன்னு கூட மிஞ்சாது!

மாலை நேரத்தில் ஒரு கப் சூடான டீயுடன் நல்ல ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. குறிப்பாக பள்ளியிலிருந்து வீடு திரும்பும் குழந்தைகள், வீட்டில் என்ன சாப்பிடலாம் என்று எதிர்பார்த்து வருவது வழக்கம். அந்த நேரத்தில் அவசரமாக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் கலந்த சிப்ஸ், பிஸ்கட்கள் போன்றவற்றை கொடுத்து விடுகிறோம். ஆனால் அவை குழந்தைகளின் உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே, முடிந்தவரை வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை பயன்படுத்தி சுவையான சூடான ஸ்நாக்ஸ் தயாரித்து கொடுப்பதே நல்லது.


ஆனால் பல நேரங்களில் என்ன ஸ்நாக்ஸ் செய்வது என்ற குழப்பத்திலேயே தாய்மார்கள் அதை செய்வதைத் தவிர்த்து விடுவது உண்டு. அப்படி நீங்களும் வீட்டிற்கு வரும் குழந்தைக்கு என்ன ஸ்நாக்ஸ் கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தால், அல்லது கொஞ்சம் வித்தியாசமாக ஏதேனும் செய்து கொடுக்க விரும்பினால், உங்கள் முதல் தேர்வாக கார்ன் வடை இருக்கலாம். ஆம். இது சுவையானது மட்டும் இல்லாமல் சத்தானதும் கூட. 

வீட் கார்னில் உள்ள இயற்கையான இனிப்பும், நாம் சேர்க்கும் மசாலாக்களின் காரமும் சேர்ந்து நாவில் ஒரு புதுவிதமான சுவையைத் தரும். எந்தவிதமான செயற்கை பொருட்களும் இல்லாமல், வீட்டில் உள்ள எளிய பொருட்களை வைத்தே, வெளியில் உள்ள ரெஸ்டாரண்ட்களில் கிடைப்பது போல அட்டகாசமான இந்த ஸ்நாக்ஸை எப்படி சுலபமாகச் செய்வது என்று பார்க்கலாம் வாங்க..

தேவையான பொருள்கள்: ஸ்வீட் கார்ன் வடை செய்வதற்கு 2 கப் ஸ்வீட் கார்ன், 1 பெரிய வெங்காயம், 2 பச்சை மிளகாய், தோல் நீக்கி துருவிய ஒரு சிறிய துண்டு இஞ்சி, 1 டீஸ்பூன் சோம்பு, அரை டீஸ்பூன் சீரகம், 3 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு மற்றும் பொரித்து எடுக்க எண்ணெய்.

முதலில் ஸ்வீட் கார்ன் முத்துக்களை நன்றாகக் கழுவி, தண்ணீர் இல்லாமல் முழுமையாக வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் ஒரு கைப்பிடி அளவு கார்ன் முத்துக்களை தனியாக எடுத்து வைத்துவிட்டு, மீதமுள்ளவற்றை மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் பல்ஸ் மோடில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும். மசால் வடை போல பருப்பு சற்று கொரகொரப்பாக இருக்கும் பதத்தில் அரைப்பது மொறுமொறுப்பான வடைக்கு முக்கியமானது; முழுமையாக நைஸாக அரைத்துவிட்டால் வடை எண்ணெயை அதிகமாக உறிஞ்சிக்கொள்ளும்.

அரைத்த கார்ன் விழுதை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளவும். அதனுடன் ஆரம்பத்தில் தனியாக எடுத்து வைத்திருந்த முழு கார்ன் முத்துக்களை சேர்க்க வேண்டும்.இப்போது இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, சோம்பு, சீரகம், மற்றும் நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளுங்கள். வடை தட்டும்போது எண்ணெயில் பிரிந்து போகாமல் இருக்க, அதனுடன் அரிசி மாவு மற்றும் கடலை மாவைச் சேர்க்க வேண்டும்.

அதன்பின் தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் எதுவும் சேர்க்காமல் கைகளால் நன்றாக பிசையவும். கார்னில் இருக்கும் இயற்கை ஈரப்பதமே மாவை ஒன்றாக பிடிக்க போதுமானது. சரியான பதத்தில் பிசைந்த மாவுதான் மொறுமொறுப்பான சுவையான வடை கிடைக்க முக்கிய காரணமாகும்.

இப்போது அடுப்பில் ஒரு கனமான கடாயை வைத்து, பொரிக்க தேவையான அளவு எண்ணெயை ஊற்றி மிதமான சூட்டில் காயவைக்கவும். எண்ணெய் சூடானதும், மாவில் இருந்து எலுமிச்சை அளவு உருண்டைகளை எடுத்து கைகளால் தட்டையாக வடிவமைத்து மெதுவாக எண்ணெயில் விடவும்.

அடுப்பை அதிக சூட்டில் வைத்தால் வெளிப்புறம் சீக்கிரம் கருகி, உள்ளே சரியாக வேகாமல் போகும். எனவே மிதமான தீயிலேயே வைத்து இரு பக்கமும் பொன்னிறமாகும் வரை பொறுமையாகப் பொரித்து எடுக்க வேண்டும். இறுதியில் எண்ணெய் முழுவதும் வடிந்த பிறகு திச்யூ பேப்பர் மீது வைத்து பரிமாறினால், சூடான மொறுமொறுப்பான கார்ன் வடை தயார்.

Also Read: இறந்தவர்கள் உங்கள் கனவில் வருகிறார்களா? காரணம் இது தான்… கனவு சாஸ்திரம் சொல்லும் விளக்கம்..

Saranya

Next Post

ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தவெக..? தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்த அதிமுக..? பரபரப்பு …

Thu Jul 2 , 2026
முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்த விவகாரம். தற்போது தேர்தல் ஆணையம் வரை சென்று பெரும் பரபராப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-க்களின் தொகுதிகளுக்கு எந்தவொரு காரணத்தைக் கொண்டும் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என அதிமுக தலைமை சார்பாக தேர்தல் ஆணையத்தில் அதிரடியாகப் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.இந்த […]
Untitled design 5 6 jpg 1

You May Like