“பாக்யராஜ் சார் திரும்ப வந்துட்டார்னு சொல்ல மாட்டாங்களா”அஞ்சலி செலுத்த வராத காரணத்தை சொன்ன ஊர்வசி!

பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜின் மறைவு திரையுலகில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் மறைந்து சில நாட்கள் ஆகியிருந்தாலும், அவருடன் பணியாற்றிய நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் தொடர்ந்து அவரைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், பாக்யராஜ் மூலம் தமிழ் சினிமாவில் முக்கிய வாய்ப்பு பெற்ற நடிகை ஊர்வசி, சமீபத்திய பேட்டியில் தனது மனவேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.


அந்த பேட்டியில், பாக்யராஜின் மறைவு குறித்து தனக்கு உடனடியாக தகவல் கிடைக்கவில்லை என்று ஊர்வசி தெரிவித்துள்ளார். படப்பிடிப்பில் இருந்ததால் செய்தி தாமதமாக தெரிந்ததாகவும், தகவல் அறிந்ததும் மறுநாள் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்த வேண்டும் என்று முடிவு செய்ததாகவும் கூறியுள்ளார்.

அடுத்த நாள் அதிகாலையிலேயே புறப்படத் தயாரானபோது, இறுதிச் சடங்கு விரைவில் நடைபெற இருப்பதாக ராதிகா தொலைபேசியில் தகவல் சொன்னதாகவும், அதனால் அவசரமாக கிளம்பியதாகவும் அவர் கூறினார். ஆனால், வழியில் சென்றுகொண்டிருக்கும்போதே இறுதிச் சடங்கு நிறைவடைந்துவிட்டதாக தெரிந்ததால் மிகுந்த வேதனையடைந்து, அவரை கடைசியாக கூட பார்க்க முடியாமல் வீட்டிற்கே திரும்பிவிட்டதாக உணர்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், பாக்யராஜுடன் இணைந்து பணியாற்றிய காலத்தில் ஏராளமான இனிய நினைவுகள் இருப்பதாகவும், அவர் உயிருடன் இருந்தபோது பல விஷயங்களை பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் மறைந்த பிறகு அவரைப் பற்றி பொதுவெளியில் பேசும்போது உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் போவதாகவும், அந்த வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தனக்கான முக்கியமான வாய்ப்பை வழங்கியவர்களில் பாக்யராஜ் முக்கியமானவர் என்றும், தனது திரைப்பயணத்தில் அவருடைய பங்களிப்பை ஒருபோதும் மறக்க முடியாது என்றும் ஊர்வசி குறிப்பிட்டார். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வாய்ப்பை தவறவிட்டது இன்னும் மனதை வலிக்கச் செய்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இப்போ கூட யாராவது இது எல்லாம் கனவு.. பாக்யராஜ் சார் திரும்ப வந்துட்டார்னு சொல்லிட மாட்டாங்களா என்ற எண்ணம் இன்னும் மனசுல இருக்கு. அவர் இல்லைன்னு ஏத்துக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு” என்ற அவரது உருக்கமான வார்த்தைகள், பாக்யராஜின் மறைவு திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் ஏற்படுத்திய தாக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

Also Read: சமூக ஊடகங்களில் வைரலாகும் ‘Burnt Toast Theory’ என்றால் என்ன? Gen Z தலைமுறையின் வாழ்க்கைப் பார்வையை மாற்றும் வைரல் மனநிலை!

Saranya

Next Post

30 நாள் இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க... ரிசல்ட்டைப் பார்த்து நீங்களே ஷாக் ஆகிடுவீங்க!

Sun Jul 5 , 2026
உடல் ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். குறிப்பாக, உடல் எடையைக் குறைத்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் பலர் பல்வேறு உணவுக் கட்டுப்பாடுகளையும் டயட் முறைகளையும் பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில், சமீப காலமாக “No Sugar”, “No Milk”, “No Oil” போன்ற பல டயட் முறைகள் சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. அவற்றில் குறிப்பாக, “No Milk, […]
images 11

You May Like