முன்பெல்லாம் யார் என்று தெரியாதவர்களைக் கூட நம்பி பல காரியங்களை செய்திருக்கிறோம். அப்போது பெரும்பாலானோர் அந்த நம்பிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையில் நடந்து கொண்டனர். ஆனால், தற்போதைய காலகட்டத்தில் நாம் மிகவும் நேசிக்கும் அல்லது முழுமையாக நம்பும் நபர்களே சில நேரங்களில் மிகப்பெரிய துரோகங்களைச் செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஏன், பெற்றோர்களே தங்கள் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சம்பவங்களையும் அடிக்கடி கேள்விப்படுகிறோம். இப்படிப்பட்ட சூழலில் மற்றவர்களை எப்படி எளிதில் நம்புவது என்ற கேள்வி பலரிடமும் எழுகிறது. அந்த வகையில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் தனது அக்கா மகளுக்கு செய்த கொடூரமான செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் காஜிப்பூர் மாவட்டத்தில் உள்ள துல்லஹ்பூர் காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்தவர் ரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு புஷ்பா தேவி என்ற சித்தி ஒருவர் உள்ளார். இந்நிலையில், புஷ்பா தேவி நான் சொல்லும் வேலையை செய்தால் ரூ.80 லட்சம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். மேலும், கிடைக்கும் பணத்தில் ரூ.20 லட்சத்தை உனக்கும் மீதம் உள்ள பணத்தை தானும் தனது காதலனும் வைத்துக்கொள்வோம் என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த வேலை குறித்து வீட்டில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று புஷ்பா தேவி எச்சரித்துள்ளார். இதனால் ரியாவிர்க்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து என்ன வேலை என்று கேட்டுள்ளார். அதற்கு புஷ்பா தேவி, கார் ஒன்றில் அசம்கார் மாவட்டத்திற்குச் சென்று ஒரு மணி நேரம் மட்டும் இருந்தால் போதும் என்று கூறியுள்ளார். மேலும், அங்கு சென்று நீ ஒரு சிலரோடு உல்லாசமாக இருந்தால் போதும் என்று கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரியா, என்னால் இந்த வேலையை செய்ய முடியாது என்று மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த புஷ்பா தேவி, நீ இதற்க்கு சம்மதிக்காவிட்டால் உன்னை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளார். இதனால் பதறிப்போன ரியா, நடந்த எல்லாவற்றையும் தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து, ரியாவின் பெற்றோர் புஷ்பா தேவி மீது துல்லஹ்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள புஷ்பா தேவி மற்றும் அவரது காதலனை தேடி வருகின்றனர்.



