அடுத்த 6 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு…! வானிலை மையம் எச்சரிக்கை…!

rain

இன்று முதல் 6 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழகத்தை நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 10 முதல் 13-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழக கடலோரப் பகுதிகளில் 9-ம் தேதியும், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் 10-ம் தேதியும் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

maha

Next Post

தூள்..! ரூ.36,660 கோடிக்கு முதலீடுகள்.. மதுரையில் 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு..!

Mon Dec 8 , 2025
மதுரையில் நடைபெற்ற ‘தமிழ்நாடு வளர்கிறது’ என்ற முதலீட்டாளர் மாநாட்டில் கப்பல் கட்டுமானம், தோல் அல்லாத காலணி, மின்னணுவியல், உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக ரூ.36,660 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை மேலூரில் 278.26 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பூங்காவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இங்கு முதலாவதாக தைவான் நாட்டை சேர்ந்த ‘பே ஹை’ […]
tamilnadu cm mk stalin

You May Like