கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடுகளும், தகராறுகளும் ஏற்படுவது பல குடும்பங்களில் காணப்படும் ஒரு சாதாரண நிகழ்வாகும். ஆனால், கோபம் மற்றும் ஆத்திரத்தில் எடுக்கும் சில முடிவுகள் எதிர்பாராத விபரீதங்களை ஏற்படுத்தி விடுகின்றன. அந்த வகையில், சாத்தூரில் கணவருடன் ஏற்பட்ட தகராறால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர் செய்த செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சாத்துார் சங்கராபுரத்தை சேர்ந்தவர் 34 வயதான மணி. அட்டை மில் ஒன்றில் லோடு மேனாக வேலை செய்து வரும் இவருக்கு 28 வயதான திவ்ய பாரதி என்ற மனைவி உள்ளார். திவ்ய பாரதி, அருகில் உள்ள கார்மெண்ட்ஸ் ஒன்றில் டெய்லராக வேலை செய்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணமான நிலையில், தற்போது அரை இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு, மணி மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் ஆத்திரமடைந்த திவ்யபாரதி, தனது கணவரின் அந்தரங்க உறுப்பு மற்றும் தலையில் கத்தியால் கொடூரமாக குத்தியுள்ளார். இதனால், மணி வலி தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார். மணியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த மணியை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மணி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் போலீசார் திவ்யபாரதியை கைது செய்துள்ளனர். மேலும், கொலை சம்பவம் தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆத்திரத்தில், மனைவி கணவனை கொடூரமாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Also Read: இரவு உணவிற்கு இத சாப்பிடுங்க… உடல் எடை முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை பல நன்மைகள் இருக்கு!



