காவிரி விவகாரத்தில் திமுக கபட நாடகமாடுவதாகவும், ஆட்சியை இழந்த விரக்தியில் மு.க.ஸ்டாலின் வன்மத்தைப் பொழிந்து வருவதாகவும் தவெக கடுமையாக சாடியுள்ளது.
இது தொடர்பாக தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”விவசாயிகள் மற்றும் கர்நாடக வாழ் தமிழர்களின் நலனைக் கருத்தில் கொண்டே முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. சுயநல நோக்கத்துடன் செயல்படும் திமுகவைப் போல் அல்லாமல், மக்கள் நலனை முதன்மையாக கொண்டே தமிழக அரசு முடிவுகளை எடுத்து வருகிறது.
கடந்த காலங்களில் மத்திய அரசிடம் பேரம் பேசி பல துறைகளைப் பெற்ற திமுக, காவிரிப் பிரச்சனைக்காகத் தனது மத்திய அமைச்சர் பதவியை ஒருநாளாவது உதறித் தள்ளத் தயாராக இருந்ததா என்று கேள்வி எழுப்பியுள்ளது. ஆட்சியில் இருந்த காலத்தில் பதவியையும் சுகத்தையும் மட்டுமே அனுபவித்த திமுக, காவிரி சிக்கலுக்கு ஒருமுறைகூட நிரந்தரத் தீர்வு காண முயலவில்லை என்றும் விமர்சித்துள்ளது.
ஆட்சியில் இருக்கும்போது அமைதி காத்துவிட்டு, அதிகாரத்தை இழந்தவுடன் உரிமை முழக்கம் எழுப்புவது திமுகவின் வழக்கம் என்று சாடியுள்ள தவெக, மே மாதம் முதலே அரசியல் ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ள விரக்தியில்தான் திமுக தொடர்ச்சியாக அலறி வருகிறது என கூறியுள்ளது.
மேலும், திமுக ஆட்சி போய் தவெக ஆட்சி வந்துவிட்டதே என்ற வன்மத்தை விட்டுவிட்டு, மக்கள் நலன் சார்ந்து ஸ்டாலின் பேச வேண்டும். ஆனால், அவரது உள்மனம் உண்மையை ஒப்புக்கொள்ளாது என்பதை உலகமே அறியும்” என்றும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் நலன்களுக்காகவும்
— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) August 1, 2026
கர்நாடக வாழ் தமிழ்ச் சொந்தங்களுக்காகவும் யோசித்துச் செயல்படுவதுதான் மக்கள் விரும்பும் முதல்வர், நம் வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மனசாட்சி உள்ள மக்களாட்சி.
திமுக போல சுயநலம் கொண்டு தனி ஆவர்த்தனம் செய்யத் துடிப்பவர் இல்லை,…
Read More : கருணாநிதியின் முடிவால் தான் தமிழகத்திற்கு இந்த நிலைமை..!! வறுத்தெடுத்த அமைச்சர் நிர்மல் குமார்..!!



