Bank Holidays | ஆகஸ்ட் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகள் இயங்காது..!! வாடிக்கையாளர்களே நோட் பண்ணிக்கோங்க..!!

Banks Closed

ஆகஸ்ட் மாதத்தில் வழக்கமான வாராந்திர விடுமுறைகள் மற்றும் மாநில அளவிலான பண்டிகை நாட்களைச் சேர்த்து அதிகபட்சமாக 14 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இதனால் நேரடி வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள் தங்களது பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


இந்தியாவில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு வழக்கமாக மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளுடனும், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளுடனும் சேர்த்து மாதம் 6 நாட்கள் விடுமுறை வழங்கப்படுகிறது. இதனுடன் அரசு பொது விடுமுறை நாட்கள் மற்றும் அந்தந்த மாநிலங்களின் பிராந்தியப் பண்டிகைகளுக்கான விடுமுறைகளும் சேரும்போது விடுமுறை நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

வங்கி விடுமுறை நாட்கள் :

ஆகஸ்ட் 4 (செவ்வாய்): கெர் பூஜா பண்டிகையை முன்னிட்டு அகர்தலாவில் வங்கிகள் இயங்காது.

ஆகஸ்ட் 8 (சனிக்கிழமை): ‘டெண்டோங் லோ ரம் ஃபாட்’ விழாவையொட்டி சிக்கிம் மாநிலத்தில் விடுமுறை.

ஆகஸ்ட் 13 (வியாழன்): தேசபக்தி நாளை முன்னிட்டு மணிப்பூர் மாநிலம் இம்பாலில் வங்கிகளுக்கு விடுமுறை.

ஆகஸ்ட் 15 (சனிக்கிழமை): சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து வங்கிகளுக்கும் பொது விடுமுறை.

ஆகஸ்ட் 19 (புதன்): மகாராஜா பிர் பிக்ராம் கிஷோர் மணிக்ய பகதூர் பிறந்தநாளை முன்னிட்டு திரிபுராவில் விடுமுறை.

ஆகஸ்ட் 26 (புதன்): மிலாடி நபி மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு குறிப்பிட்ட சில மாநிலங்களில் வங்கிச் சேவைகள் இருக்காது.

ஆகஸ்ட் 28 (வெள்ளி): ரக்ஷா பந்தன், ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி, ஈத்-இ-மிலாத்-உல்-நபி மற்றும் பாங்-லாப்சோல் ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு கேரளா, குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் மூடப்பட்டிருக்கும் இந்த நாட்களில் பணப்பரிவர்த்தனைகளுக்கான யுபிஐ (UPI), நெட் பேங்கிங், ஏடிஎம் (ATM) மற்றும் கேஷ் டெபாசிட் மெஷின் (CDM) போன்ற ஆன்லைன் சேவைகள் வழக்கம் போல் தடங்கலின்றி இயங்கும். இருப்பினும், காசோலை கிளியரிங் (Cheque Clearing), புதிய கணக்கு தொடங்குதல், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் லாக்கர் பயன்பாடு போன்ற நேரடி வங்கிச் சேவைகளைப் பெற முடியாது என்பதால் பொதுமக்கள் தங்கள் பணிகளைத் திட்டமிட்டு செயல்படுத்துவது அவசியமாகும்.

Read More : தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் எட்டப்பர்கள்..!! எம்பி ராகுல் காந்தி கடும் தாக்கு..!!

Next Post

டிரம்ப் முடிவால் பற்றி எரியும் மேற்காசிய போர்..!! பதிலடி கொடுக்க ஈரான் தயார் செய்த சீக்ரெட் பிளான்..!!

Sun Aug 2 , 2026
அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தன் மீது தாக்குதல் நடத்தினால், பதிலடி கொடுக்கும் வகையில் அண்டை நாடுகளில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு உட்கட்டமைப்புகளை தகர்ப்பதற்கான இலக்குகளை ஈரான் விரிவாக தயாரித்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி இறுதியில் போர் தொடுத்தன. போர் தீவிரமடைந்த நிலையில், சர்வதேச கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்துக்கு மிக முக்கியமான வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை […]
America Iran 2026

You May Like