fbpx

சற்று முன்…! தமிழகத்தில் 7 டோல் கேட்டில் நள்ளிரவு முதல் ரூ.400 வரை கட்டண உயர்வு அமல்…!

தமிழகத்தில் 7 டோல்கேட்டில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 62 சுங்கச்சாவடிகளில் 7 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. மணகெதி, கல்லக்குடி, வல்லம், இனம்கரியாந்தல், தென்னமாதேவி, பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகளின் சுங்க கட்டணம் உயர்வு. ஒருமுறை, ஒரே நாளில் திரும்பும் கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரையிலும் மாதாந்திர பாஸ் ரூ.100 முதல் ரூ.400 வரை உயர்த்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்த வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள 7 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு ஏப்ரல்.1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக கடந்த மாதம் 23ஆம் தேதி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்தது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 62 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஆண்டு தோறும் ஏப்ரல் 1-ம் தேதி சுங்கச் சாவடிகளிலும், செப்டம்பர் 1-ம் தேதி மற்ற சுங்கச்சாவடிகளிலும் கட்டணத்தை மாற்றி அமைப்பது வழக்கம். இந்நிலையில் போக்குவரத்து அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு பிறகு இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

Vignesh

Next Post

Gas: குட்நியூஸ்!... சிலிண்டர் விலை குறைந்தது!... எவ்வளவு தெரியுமா?

Mon Apr 1 , 2024
Gas: வர்த்தக சிலிண்டர்களின் விலை ரூ.30.50 குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சமையல் கேஸ் சிலிண்டர் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன. வர்த்தக கேஸ் சிலிண்டரை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. கச்சா எண்ணெய்யின் விலை நிலவரம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் செலவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விலை நிர்ணயிக்கப்படும். அந்தவகையில் வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை இன்று […]

You May Like