கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், அம்மாநிலத்தின் 8 மாவட்டங்களுக்கு அதிதீவிர மழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் இடைவிடாது பெய்து வரும் மழையால் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் பல பகுதிகளில் மழையின் அளவு 100 மில்லி மீட்டரை கடந்து பதிவாகியுள்ளது.
இந்நிலையில், மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்பதைக் கணித்து பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது.
மேலும் ஆலப்புழா, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கையும், திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அதிதீவிர கனமழைக்கான ரெட் அலர்ட் மற்றும் நிலச்சரிவு அபாயம் காரணமாக, கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Read More : “ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும்”..!! உதயநிதி கைதுக்கு எதிராக கொந்தளித்த ஸ்டாலின்..!!



