வெறும் 7 நாட்களில் 2026-ன் அதிக வசூல் படமான ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’!

MCDSPMA SP138 e1785154645459 1

சோனி பிக்சர்ஸ் மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள ‘Spider-Man: Brand New Day’ திரைப்படம், வெளியாகி வெறும் ஏழு நாட்களிலேயே 2026-ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த திரைப்படமாக புதிய சாதனை படைத்துள்ளது. உலகம் முழுவதும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், டிஸ்னியின் ‘Zootopia 2’ திரைப்படத்தின் வசூல் சாதனையையும் முறியடித்துள்ளது. டாம் ஹாலண்ட் மற்றும் ஜெண்டயா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த சூப்பர் ஹீரோ திரைப்படம், இதுவரை உலகளவில் 1.155 பில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்துள்ளது.


இதில் வட அமெரிக்காவில் மட்டும் 449 மில்லியன் டாலரும், சர்வதேச சந்தைகளில் 706.3 மில்லியன் டாலரும் வசூலாகியுள்ளது. இந்த வசூல் மூலம், ஜூன் மாதம் வெளியான ‘Zootopia 2’ திரைப்படத்தின் 1.067 பில்லியன் டாலர் உலகளாவிய வசூலை ‘Spider-Man: Brand New Day’ கடந்துள்ளது. இதன் மூலம் 2026-ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. வசூலில் மட்டுமல்லாமல், அமெரிக்க பாக்ஸ் ஆபிஸிலும் இப்படம் பல புதிய சாதனைகளை படைத்துள்ளது. செவ்வாய்க்கிழமை மட்டும் 42 மில்லியன் டாலர் வசூலித்து, 2021-ஆம் ஆண்டு வெளியான ‘Spider-Man: No Way Home’ திரைப்படம் படைத்த 39 மில்லியன் டாலர் சாதனையை முறியடித்தது.

அதேபோல், திங்கட்கிழமை 47 மில்லியன் டாலர் வசூலித்து, 2018-ஆம் ஆண்டு வெளியான ‘Avengers: Infinity War’ படத்தின் 40 மில்லியன் டாலர் வசூல் சாதனையையும் பின்னுக்குத் தள்ளியுள்ளது. மேலும், வட அமெரிக்காவில் வெறும் நான்கு நாட்களில் 400 மில்லியன் டாலர் வசூலை கடந்த அதிவேக திரைப்படமாகவும் இது சாதனை படைத்துள்ளது. உலகளவில் 1 பில்லியன் டாலர் வசூலை வெறும் ஆறு நாட்களில் எட்டிய இரண்டாவது திரைப்படமாகவும் ‘Spider-Man: Brand New Day’ மாறியுள்ளது. இதற்கு முன், 2019-ஆம் ஆண்டு வெளியான ‘Avengers: Endgame’ மூன்று நாட்களில் 1.2 பில்லியன் டாலர் வசூலித்து இந்த சாதனையை படைத்திருந்தது.

இதற்கு முன்பே, ‘Spider-Man: Brand New Day’ அமெரிக்காவில் அதிக வசூல் செய்த தொடக்க வார இறுதி திரைப்படம் என்ற சாதனையையும், உலகளவில் 932 மில்லியன் டாலர் வசூலுடன் இரண்டாவது மிகப்பெரிய ஓப்பனிங் பெற்ற திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றிருந்தது. இந்தப் படத்தை டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கியுள்ளார். இதில் டாம் ஹாலண்ட் பீட்டர் பார்க்கர் (ஸ்பைடர்மேன்) கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ஜெண்டயா, ஜேக்கப் படாலன், மார்க் ரஃபலோ, ஜான் பெர்ன்தால், சேடி சிங்க், டிராமல் டில்மேன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸில் (MCU), டாம் ஹாலண்ட் நாயகனாக நடித்துள்ள நான்காவது தனி ‘ஸ்பைடர்மேன்’ திரைப்படமாகும்.

Also Read: 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… வீடியோ பதிவு செய்த வீட்டு உரிமையாளர் கைது!

Saranya

Next Post

பழைய திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுறோமா? அமைச்சர் நிர்மல் குமார் பதிலடி..!!

Thu Aug 6 , 2026
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது முந்தைய அரசின் நல்ல திட்டங்களை தொடர்வது இயல்பான ஒன்றுதான் என்றும், திட்டங்களுக்கு எந்த தனிநபரின் பெயரையும் சூட்டாமல் பொதுவான பெயர்களை சூட்டுவதே தவெக அரசின் முதன்மை நோக்கம் என்றும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தவெக அரசு புதிய பெயர்களில் பழைய திட்டங்களையே ‘ஸ்டிக்கர்’ ஒட்டிச் செயல்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு […]
Nirmal Kumar 2026

You May Like