காவிரி நீர் நமக்கு உயிர் ஆதாரம்; அதனை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் இந்த அரசுக்கு சிறிதும் இல்லை. தமிழ்நாட்டின் வாழ்வாதார உரிமைகளுக்காகப் பக்கத்து மாநிலத்திடம் பேசி தீர்வு காணும்போது அவமானம் நேரிட்டாலும், மக்களுக்காக அதைத் தாங்கிக் கொள்ளத் தயார்” என்று முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சனும், அதைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத்தும் தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், “தவெக அரசு அமைந்த பிறகு மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசு முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் செயல்பட்டு வருகிறது. காவிரி விவகாரத்தில் அம்மாநிலத்தின் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து நிற்கும்போது, தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூடக் கூட்ட மறுப்பது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், “மேகதாது அணை கட்டும் விஷயத்தில் தமிழ்நாட்டின் உரிமையை இந்த அரசு ஒருபோதும் விட்டுத் தராது. காவிரிப் பிரச்சினையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என நானே முன்வந்து கோரிக்கை வைத்தேன். பேரவையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தை பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளோம். மத்திய நீர்வளத் துறை அமைச்சரின் பதிலுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி மீண்டும் கடிதம் எழுதியுள்ளேன். கடந்த 1969-ஆம் ஆண்டு கர்நாடகாவில் சில அணைகள் கட்டப்பட்டபோதும் இதே பேரவையில் தீவிர விவாதங்கள் நடைபெற்றதை நாம் நினைவுகூர வேண்டும்” என குறிப்பிட்டார்.
தொடர்ந்து கர்நாடகா பயணம் குறித்துப் பேசிய அவர், “காவிரிப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே பெங்களூரு செல்ல முடிவெடுத்தேன். கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்தித்துப் பேசிப் பார்க்கலாம் என்று நினைத்தேன். உலகளவில் எதிரி நாடுகளே பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணும் போது, பக்கத்து மாநிலத்துடன் பேசுவதில் தவறில்லை. ‘ஒருவேளை பெங்களூரு சென்றால் அவமானம் நேரிட்டால் என்ன செய்வது?’ எனச் சிலர் என்னிடம் கேட்டார்கள். என் தமிழ்நாட்டு மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்கிக்கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன்” என்று கூறினார்.
Read More : BREAKING | விவகாரத்து வழக்கை வாபஸ் பெற்றார் சங்கீதா..!! நிம்மதியில் முதல்வர் விஜய்..!! அடுத்த பிளான் என்ன?



