தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழகச் சட்டமன்றத்தில் நாளை தனித் தீர்மானம் கொண்டு வரப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு மேற்கொள்ள திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக, தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை முதலமைச்சர் விஜய் கூட்டியிருந்தார். அக்கூட்டத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட கருத்துகள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையில், தொகுதி மறுவரையறை தொடர்பான மத்திய அரசின் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் மற்றும் புதிய மசோதாவிற்கு எதிராக அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளையும் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் நிரந்தரமாகப் பாதுகாக்கும் வகையில், வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இதற்கென தனித் தீர்மானம் நிறைவேற்ற ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தொகுதி மறு வரையறை தொடர்பாக சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் நாளை தீர்மானம் கொண்டு வருகிறார். தற்போதுள்ள லோக்சபா உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 என்ற அளவில் நிரந்தரமாக வைக்க வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.
Read More : விஜயின் 2-வது திருமணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த சங்கீதா..! வீட்டில் நடந்த ரகசிய பேச்சுவார்த்தை..!



