விஜயின் 2-வது திருமணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த சங்கீதா..! வீட்டில் நடந்த ரகசிய பேச்சுவார்த்தை..!

Vijay Sangeetha 2026

முதல்வர் விஜய், அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு திரும்பப் பெறப்பட்டது தொடர்பான பல்வேறு தகவல்களும் கேள்விகளும் இணையத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.


முன்னதாக, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் சங்கீதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த விவாகரத்து மனுவை, கடந்த வாரம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது திரும்பப் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அம்மனு முடித்து வைக்கப்பட்டதாக நீதிமன்றம் அறிவித்தது. கணவருடன் இணைந்து வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்த பிறகே சங்கீதா இந்த வழக்கை தொடர்ந்திருப்பார் என கருதப்பட்ட நிலையில், திடீரென மனுவைத் திரும்பப் பெற்றதற்கான காரணம் என்ன என்பது விடை தெரியாத கேள்வியாகவே உள்ளது.

விவாகரத்து மனுவில் நடிகை ஒருவருடனான தொடர்பு குறித்து குறிப்பிட்டிருந்ததாக எழுந்த தகவல்கள் பெரும் விவாதப் பொருளாயின. மேலும் ஜீவனாம்சம் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலப் பொறுப்புகள் குறித்தும் பல உறுதிப்படுத்தப்படாத செய்திகள் உலா வந்தன.

தற்போது மனுத் திரும்பப் பெறப்பட்டுள்ளதை தொடர்ந்து, இரு குடும்பத்தாருக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கலாம் என்றும், பொது வாழ்வில் முதல்வராக இருக்கும் நிலையில் இத்தகைய விவகாரங்கள் அவரது அந்தஸ்தைப் பாதிக்கக் கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் கூறப்படுகிறது. அதேநேரத்தில், பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டே சங்கீதா தமது முடிவை மாற்றிப் பெற்றிருக்கக் கூடும் என்ற கருத்துகளும் நிலவுகின்றன.

அதேவேளையில், விவாகரத்து வழக்கு வாபஸ் பெறப்பட்டாலும் இருவரும் மீண்டும் இணைந்து வாழத் தொடங்கிவிட்டனரா என்பது குறித்து தெளிவான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. சட்டப்பூர்வமாக விவாகரத்து அளித்துவிட்டால் மற்றொரு திருமணத்திற்கு வழிவகுத்து விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக மனு திரும்பப் பெறப்பட்டிருக்கலாமா என்ற கேள்விகளையும் சிலர் எழுப்புகின்றனர்.

விவாகரத்து மனுவைத் திரும்பப் பெற்றது குறித்து விஜய் அல்லது சங்கீதா தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ விளக்கங்கள் எதுவும் அளிக்கப்படாத வரை, இதன் பின்னணியில் உள்ள உண்மை தகவல்கள் மர்மமாகவே நீடிக்கும்.

Read More : உறுதியாகிறதா திமுக – பாஜக கூட்டணி..? வானதி சீனிவாசன் பேட்டியால் அரசியலில் பரபரப்பு..!!

Next Post

ஆவின் பால் கொள்முதல் விலை உயர்கிறது? CM விஜய் நேரடி பரிசீலனை..!! சட்டசபையில் அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!!

Tue Aug 11 , 2026
தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்திற்கு பால் விநியோகம் செய்யும் பால் உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை கருத்தில் கொண்டு, பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவது குறித்து தமிழக முதலமைச்சர் விஜய் தீவிரமாக பரிசீலித்து வருவதாக சட்டசபையில் அமைச்சர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் விவாதத்தின் போது பேசிய அவர், ஆவின் நிறுவனத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பால் வழங்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து […]
Aavin 2026

You May Like