தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை கட்டாயம் முதலில் பாட வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிந்தார். அப்போது பேசிய அவர், “இந்தியாவின் நெற்றியில் வைக்கக்கூடிய வெற்றிப் பொட்டுதான் நம் தமிழ்நாடு. தமிழ் என்றாலே கெத்து; தமிழ் என்றால் அது தனி பவர். தமிழ் மொழி என்றால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒன்றாக நிற்கும்” என்று பேசினார்.
மேலும், சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை முதலில் பாட வேண்டும் என முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தான், இதுதொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை கட்டாயம் முதலில் பாட வேண்டும் என தமிழக அரசு அரசாணை ஆணையிட்டுள்ளது.
Read More : முதல்வர் விஜயின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு..!! பிரம்மாண்ட ஒப்பந்தங்கள் கையெழுத்து..!!


