Heavy Rain | இடி, மின்னலுடன் தமிழகத்தை புரட்டி எடுக்கப்போகும் கனமழை..!! வானிலை மையம் முக்கிய அலெர்ட்..!!

heavy rain

தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இன்றைய நிலவரப்படி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், வட கடலோர தமிழகப் பகுதிகள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதே சூழல் நாளையும் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 17 அன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலும், ஆகஸ்ட் 18 அன்று செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேநேரம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழையும் பதிவாகக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நகரின் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் பதிவாகக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

Read More : சட்டசபையில் ஒலித்த குரல்..!! CM விஜய்யின் அதிரடி முடிவு..!! முதல்முறை MLA-க்களுக்கு கார்..!!

Next Post

வெட்க கேடான செயல்..!! வந்தே மாதரம் பாடலை பாதியிலேயே நிறுத்த சொன்ன சோனியா..? சுதந்திர தின விழாவில் பரபரப்பு..!!

Sat Aug 15 , 2026
டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்ட நிகழ்வின் போது வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. சில வரிகள் மட்டுமே பாட வேண்டும் என பாடகர்களுக்கு காங்கிரஸ் தலைமை சார்பில் அறிவுறுத்தப்பட்டதாகவும், ஆனால் இசை குழுவினர் முழு பாடலையும் பாடியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா, ராகுல் ஆகியோர் பாடலை நிறுத்துமாறு கையசைத்துள்ளனர். எனினும் பாடல் முழுமையாக பாடி முடிக்கப்பட்டது இது தொடர்பான […]
Soniya 2026

You May Like