வெட்க கேடான செயல்..!! வந்தே மாதரம் பாடலை பாதியிலேயே நிறுத்த சொன்ன சோனியா..? சுதந்திர தின விழாவில் பரபரப்பு..!!

Soniya 2026

டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்ட நிகழ்வின் போது வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. சில வரிகள் மட்டுமே பாட வேண்டும் என பாடகர்களுக்கு காங்கிரஸ் தலைமை சார்பில் அறிவுறுத்தப்பட்டதாகவும், ஆனால் இசை குழுவினர் முழு பாடலையும் பாடியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா, ராகுல் ஆகியோர் பாடலை நிறுத்துமாறு கையசைத்துள்ளனர். எனினும் பாடல் முழுமையாக பாடி முடிக்கப்பட்டது


இது தொடர்பான விடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்துள்ள பாஜக செய்தி தொடர்பாளர் கோபால் கிருஷ்ணா அகர்வால், காங்கிரஸின் இந்த செயல் வெட்க கேடானது என்று தெரிவித்துள்ளார். வந்தே மாதரம் பாடல் வெறும் தேசிய கீதம் மட்டுமல்ல அது ஒரு தேசிய உணர்வு என்று கூறியுள்ள அவர், தேசிய கீதத்தை காங்கிரஸ் அவமானப்படுத்தி விட்டதாகவும், வந்தே மாதரம் பாடப்படுவதற்கு சோனியா எதிர்ப்பு தெரிவித்திருப்பது காங்கிரஸின் மன நிலையை பிரதிபலிக்கிறது என்றார்.

இந்நிலையில், பாஜகவின் குற்றச்சாட்டை காங்கிரஸ் மறுத்துள்ளது. காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நீண்ட நேரம் நிற்க வேண்டி இருப்பதால் அவருக்கு நாற்காலி வழங்க கோரி சோனியா கேட்டதாகவும், வந்தே மாதரம் பாடலை அவர் பாதியில் நிறுத்த சொல்லி அவமதிக்கவில்லை என்றும் காங்கிரஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Read More : சட்டசபையில் ஒலித்த குரல்..!! CM விஜய்யின் அதிரடி முடிவு..!! முதல்முறை MLA-க்களுக்கு கார்..!!

Next Post

இயற்கையின் கோரத் தாண்டவம்! இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்!. 38 பேர் பலி; சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி!

Sat Aug 15 , 2026
இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஃபுளோரஸ் தீவில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கோர விபத்தில் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 5.58 […]
indonesiaearthquake

You May Like