புதுடெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 6 மாதங்களாக சிறையில் இருக்கும் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லியில் கடந்த 2021ஆம் ஆண்டு புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. அதன்படி, 849 கடைகள் தனியாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.-யும் குற்றம்சாட்டி இருந்தன.