தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் என்.ஆனந்த், கடந்த கால அரசியல் கணிப்புகளை தவிடுபொடியாக்கி மக்கள் தவெக மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.
சட்டசபையில் துறை சார்ந்த விவாதங்களுக்குப் பதிலளித்துப் பேசிய அவர், முதலமைச்சர் விஜய்யுடன் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மிக நெருக்கமாகப் பழகி வருவதை நினைவுகூர்ந்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சாதி, மதம் மற்றும் பணபலம் என எந்தவொரு காரணியும் எடுபடவில்லை என்றும், தேர்தலுக்கு முன்பாகத் தமிழக வெற்றிக் கழகம் வெறும் 2 முதல் 7 சதவீத வாக்குகளை மட்டுமே பெறும் என்று கூறப்பட்ட கருத்துக்கணிப்புகளை எல்லாம் மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் தகர்த்தெறிந்துவிட்டனர் என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், தியாகராய நகர் தொகுதியில் வெறும் 4 நாட்கள் மட்டுமே பிரச்சாரம் மேற்கொண்ட போதிலும், தன்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்த தொகுதி மக்களுக்குத் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். அத்துடன், கடந்த காலங்களில் ‘சர்க்கார்’ திரைப்படத்தின் பேனர்களைக் கிழித்து சர்ச்சையை ஏற்படுத்தாமல் இருந்திருந்தால், அதிமுக ஆட்சி தொடர்ந்து நீடித்திருக்கக் கூடும் எனவும் அவர் பேரவையில் கருத்து தெரிவித்தார்.
Read More : OTTஇல் வெளியாகிறது CM விஜய்யின் ஜனநாயகன்..!! தேதியை அறிவித்தது தயாரிப்பு நிறுவனம்..!!



