OTTஇல் வெளியாகிறது CM விஜய்யின் ஜனநாயகன்..!! தேதியை அறிவித்தது தயாரிப்பு நிறுவனம்..!!

Vijay 2026 2

திரையுலகின் முன்னணி நட்சத்திரமும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் கதாநாயகனாக நடித்து, அவரது திரையுலகப் பயணத்தின் கடைசி திரைப்படமாக உருவான “ஜனநாயகன்” திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த ஜூலை 23-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. விமர்சன ரீதியாகக் கலவையான கருத்துகளைப் பெற்றபோதிலும், ரசிகர்களாலும் ஆதரவாளர்களாலும் திரையரங்குகளில் இத்திரைப்படம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரவேற்பைப் பெற்றது. அனிருத் இசையமைப்பில் உருவான இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்நிலையில், திரையரங்கு வெளியீட்டைத் தொடர்ந்து ‘ஜன நாயகன்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி ஜீ5 (ZEE5) ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளில் வெளியாகவுள்ளதாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. திரையரங்குகளை தொடர்ந்து தற்போது டிஜிட்டல் தளத்திலும் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : அரசுப் பேருந்துகளில் வடமாநிலத்தவர்களுக்கு பணியா..? உண்மை என்ன..? போக்குவரத்துக் கழகம் பரபரப்பு விளக்கம்..!!

Next Post

சர்க்கார் பட பேனரை கிழித்ததால் அதிமுக ஆட்சியில் இல்லை..!! சட்டப்பேரவையில் வெளுத்து வாங்கிய அமைச்சர் ஆனந்த்..!!

Wed Aug 19 , 2026
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் என்.ஆனந்த், கடந்த கால அரசியல் கணிப்புகளை தவிடுபொடியாக்கி மக்கள் தவெக மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார். சட்டசபையில் துறை சார்ந்த விவாதங்களுக்குப் பதிலளித்துப் பேசிய அவர், முதலமைச்சர் விஜய்யுடன் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மிக நெருக்கமாகப் பழகி வருவதை நினைவுகூர்ந்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சாதி, […]
vijay bussy anand

You May Like