அமெரிக்கா வைத்த செக்..!! பதிலுக்கு கனடா கொடுத்த ஷாக்..!! 50% வரி விதிப்பு.. வர்த்தக பேச்சுவார்த்தையும் ரத்து..!!

Trump Canada 2026

அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வந்த இருதரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து, கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா, 50% வரி விதித்தது. பதிலுக்கு கனடாவும் வரி விதித்துள்ளது.


அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதலே வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் கூடுதல் வரிகளை விதித்து வரும் டிரம்ப், தற்போது கனடாவின் மீதும் இந்த வரி விதிப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் தெரிவிக்கையில், இந்த வாரத் தொடக்கத்தில் இரு நாடுகளும் ஏற்றுக்கொண்ட நிபந்தனைகளின்படி வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யக் கனடா திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும், எஃகு மற்றும் அலுமினியம் உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கான வரிகளைக் குறைக்க அமெரிக்கா அளித்த சலுகைகளையும் அந்நாடு நிராகரித்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

அமெரிக்காவின் இந்த அதிரடி வரி விதிப்பு முடிவுக்குப் பதிலடியாக, கனடாவும் அமெரிக்கப் பொருட்கள் மீது கூடுதல் வரிகளை விதிக்கும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். அமெரிக்கா முன்மொழிந்த நிபந்தனைகளில் கடைசி நேரத்தில் தன்னிச்சையாகச் செய்யப்பட்ட மாற்றங்கள் முற்றிலும் நியாயமற்றவை என்றும், இது எந்தவொரு சர்வதேச வர்த்தக ஒப்பந்தத்தின் மீதான நம்பகத்தன்மையையும் சீர்குலைப்பதாக உள்ளதாகவும் அவர் சாடினார். மேலும், வரவிருக்கும் சவாலான நாட்களில் கனடாவின் தொழிலாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்களைப் பாதுகாக்கத் தனது அரசு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கும் என உறுதியளித்தார்.

தற்போது கனடாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் சுமார் 70 சதவீதம் அமெரிக்காவையே நம்பியிருக்கும் சூழலில், இனிவரும் காலங்களில் நாடு தனது சர்வதேச ஏற்றுமதியைப் பன்முகப்படுத்தி, அமெரிக்காவை மட்டுமே சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்க வேண்டியது கட்டாயம் என்றும் மார்க் கார்னி சுட்டிக்காட்டினார். அமெரிக்காவின் வாகனங்கள், எஃகு மற்றும் அலுமினியம் மீதான தொடர் வரிகளால் கடுமையான பொருளாதாரச் சுமையையும் வேலை இழப்புகளையும் எதிர்கொண்டு வரும் கனடா, வர்த்தக ரீதியான நிவாரணத்தைக் கோரி வந்த நிலையில், தற்போதைய 50 சதவீத வரி விதிப்பானது ஒரு காலத்தில் மிக வலுவாக இருந்த இரு நாடுகளின் வர்த்தக உறவை மேலும் விரிசலடைய செய்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா விதிக்கும் வரிக்கும் இணையாக கனடாவும் இனி வரி விதிக்கும் என அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தையும் ரத்து செய்வதாக தெரிவித்தார்.

Read More : அதிர்ச்சி!!! பெண்ணை துண்டு துண்டாக வெட்டி, மைதா மாவு, காய்கறிகள் சேர்த்து சமைக்க முயன்ற ஜோடி!

Next Post

‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டம்: டெண்டரில் குறைந்த விலை கூறிய ஜாய் ஆலுக்காஸ்; 70% பணி ஆணை!

Sat Aug 22 , 2026
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முன்வைத்ததாக கூறப்படும் திட்டங்களில் ஒன்றாக பேசப்பட்டு வரும் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளையும், அவர்களின் தாய்மார்களையும் கவுரவிக்கும் வகையில் தங்க மோதிரம் வழங்கும் இந்தத் திட்டத்துக்கான கொள்முதல் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, 2026 ஜூன் 22-ம் தேதி முதல் […]
52ce45d8ca42111a277efbb326c87967

You May Like