அதிர்ச்சி!!! பெண்ணை துண்டு துண்டாக வெட்டி, மைதா மாவு, காய்கறிகள் சேர்த்து சமைக்க முயன்ற ஜோடி!

fdcb9096c017a70c3f5294914669ef1d

சென்னையில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, உடல் பாகங்களை மறைக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்குப் பிறகு உடலை துண்டு துண்டாக வெட்டி, சில பாகங்களை சமையல் பாத்திரத்தில் வைத்து தடயங்களை அழிக்க முயன்றதுடன், மற்றொரு பகுதியை சூட்கேஸில் அடைத்து ரயிலில் விட்டுச் சென்ற சம்பவம் போலீசாரின் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து ஆந்திரா நோக்கிச் சென்ற ரயிலில், ரத்தக்கறையுடன் சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்று கிடந்தது. சந்தேகமடைந்த ரயில்வே போலீசார் சூட்கேஸை திறந்து பார்த்தபோது, அதற்குள் ஒரு பெண்ணின் கை, கால்கள் உள்ளிட்ட உடல் பாகங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்யத் தொடங்கினர்.

விசாரணையில், கண்ணாடி அணிந்த இளம்பெண் ஒருவரும், குறுந்தாடியுடன் இருந்த இளைஞர் ஒருவரும் அந்த சூட்கேஸை ரயில் நிலையத்துக்கு கொண்டு வந்த காட்சிகள் சிக்கின. இருவரும் சென்ட்ரல் நிலையத்துக்கு வந்து ஆக்ரா செல்லும் ரயிலில் சூட்கேஸை வைத்துவிட்டு, உடனடியாக அங்கிருந்து வெளியேறியதும் சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது. பின்னர் அவர்கள் மின்சார ரயில் மூலம் கூடுவாஞ்சேரி நோக்கிச் சென்ற தடயமும் போலீசாருக்கு கிடைத்தது.

இதையடுத்து, 300-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து, அந்த இருவரும் ஆட்டோவில் கூடுவாஞ்சேரி மசூதி பகுதியை நோக்கிச் சென்றதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் அவர்கள் வசித்து வந்ததாக சந்தேகிக்கப்பட்ட வீட்டை போலீசார் அடையாளம் கண்டனர். அந்த வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்ததால், போலீசார் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்தினர்.

வீட்டுக்குள் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு ஒரு பெண் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பல துண்டுகளாக வெட்டப்பட்டிருந்ததற்கான தடயங்கள் கிடைத்தன. மேலும், உடல் பாகங்களை மறைப்பதற்காக பெரிய சமையல் பாத்திரத்தில் அவற்றை வைத்து, மைதா மாவு மற்றும் காய்கறிகளை சேர்த்து சமைக்க முயன்றதற்கான தடயங்களும் கண்டெடுக்கப்பட்டன. உடலின் சில பாகங்களை மட்டுமே சூட்கேஸில் வைத்து ரயிலில் கொண்டு சென்று விட்டுச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால், கொலை செய்யப்பட்ட பெண்ணின் தலை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

போலீசாரின் விசாரணையில், சிசிடிவி காட்சிகளில் இடம்பெற்ற பெண்ணின் பெயர் பகவதி பாஜி என்றும், அவருடன் இருந்த இளைஞர் மாணிக் லஸ்கர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், கொலை செய்யப்பட்டதாக கருதப்படும் ஹைதுல் நிஷா என்ற பெண் சம்பவத்துக்கு முந்தைய சுமார் 10 நாட்களாக அவர்களுடன் அதே வீட்டில் தங்கியிருந்ததும் தெரியவந்துள்ளது.

ஹைதுல் நிஷாவுக்கும் பகவதி பாஜி மற்றும் மாணிக் லஸ்கருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், ஹைதுல் நிஷாவின் மகன் தாம்பரத்தில் வேலை செய்து வருவதாகவும், தனது தாயாரின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அவரை விட்டு பிரிந்து பெருங்களத்தூரில் தனியாக வசித்து வந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். தனது தாயை அவர்கள் எதற்காக கொலை செய்தார்கள் என்பது தனக்கு தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

சம்பவத்துக்குப் பிறகு பகவதி பாஜி மற்றும் மாணிக் லஸ்கர் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அவர்கள் தற்போது ஒடிசாவில் இருக்கலாம் என போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, இருவரையும் கைது செய்வதற்காக தனிப்படை போலீசார் ஒடிசாவுக்கு விரைந்துள்ளனர். கொலைக்கான காரணம், உடலை மறைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி மற்றும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Also Read: “சார்… நான் என்னோட புருஷனை கொன்னுட்டேன்!” கணவனை வெட்டிக் கொன்ற மனைவி சொன்ன காரணம்!

Saranya

Next Post

சிறையில் இருக்கும் ரவுடியுடன் வீடியோ கால்; கேமரா முன் ஆடைகளை கழற்றிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்!

Sat Aug 22 , 2026
கர்நாடகாவில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொடர்பான தனிப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், அதன் பின்னணியில் சிறைக்குள் நடந்ததாகக் கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளும் தற்போது வெளியாகியுள்ளன. சிறையில் இருந்த ரவுடியுடன் அந்த பெண் இன்ஸ்பெக்டருக்கு தொடர்பு இருந்ததாகவும், இருவரது தொடர்பு தொடர்பான வீடியோ பதிவு தற்போது வெளியானதாகவும் போலீஸ் விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவில், பெண் […]
WhatsApp Image 2026 08 22 at 3.35.58 PM

You May Like