சென்னை, கோவை, ஈரோடு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், டெங்கு காய்ச்சல் தடுப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம், அமைச்சர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி வரை, 25,585 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். 12 பேர் உயிரிழந்தனர்.
ஆனால், நடப்பாண்டில் ஆக., 23ம் தேதி வரை, 12,498 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் உயிரிழந்தனர். சென்னை, கோவை, ஈரோடு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் தென்காசி மாவட்டங்களில், டெங்கு மற்றும் காய்ச்சல் பாதிப்புகள் அதிகளவில் உள்ளன. எனவே, தமிழகம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கொசு ஒழிப்புப் பணிகளை அரசு தீவிரமாக முன்னெடுத்து வருவதாக கூறினார்.
மேலும், தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தில், ஒரு பைசா ஒப் பந்தத்தின் வாயிலாக, அரசுக்கு ஆண்டுக்கு 25 கோடி ரூபாய் சேமிக்கப்படுகிறது. உரிய விதிமுறைக ளுக்கு உட்பட்டு, ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது என்றார்.



