ராட்சத வெள்ளம்!. பலி எண்ணிக்கை 469 ஆக உயர்வு!. சுமார் 200 இந்தியர்கள் மாயம்!. சீனா புதிய பேரிடர் எச்சரிக்கை!.

nepal death 30kb

நேபாளத்தில் ஏற்பட்ட கோரமான திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள போதிலும், நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் உள்பட 1,400-க்கும் மேற்பட்டோர் இன்னும் மாயமாகி இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.


நேபாளத்தின் புதிய சுற்றுலா வாரியத்தின் தரவுகளின்படி, அந்நாட்டைச் சேர்ந்த 178 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும் 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தத் துயரமான நிகழ்வில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் மாயமாகியுள்ள நிலையில், மின் திட்டப் பணியில் ஈடுபட்ட 73 பேர் உட்பட 288 இந்தியர்களும் அடங்குவர். மாயமானவர்களைக் கண்டறிவதிலும், நிவாரணப் பணிகளிலும் இந்திய வெளியுறவு அமைச்சகம் நேபாள அரசுடன் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

நேபாளத்தைத் தவிர திபெத் பகுதியிலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன; மேலும் அங்கு நிலவும் தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக உருவான ஏரியால் downstream எனப்படும் கீழ்நோக்கிய பகுதிகளில் பெருவெள்ள அபாயம் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்தச் பேரழிவிற்குப் புவி வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் பலவீனமடைந்ததே காரணம் என்று விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் செயற்கைக்கோள் படங்களை ஆராய்ந்து தெரிவித்துள்ளனர். திபெத்தில் வெள்ள அபாயம் காரணமாக மீட்புப் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளனன. வெள்ளத்தின் மையப்பகுதியில் ஏரி உருவானதால், மீட்புக் குழுவினர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக சீன அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சோசென் கோலா மற்றும் புரேபு சாங்போ ஆறுகள் சங்கமிக்கும் இடத்திற்கு அருகில் உருவான தடுப்பு ஏரியால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் குறித்து எச்சரித்து, சீனாவின் நீர்வள அமைச்சகம் திபெத் தன்னாட்சிப் பிராந்தியத்தில் அவசரநிலையை அறிவித்துள்ளது. இந்த ஆறுகள் திபெத்தில் உருவாகி, போதே கோஷி நதி அமைப்பின் ஒரு பகுதியாக நேபாளத்தில் பாய்கின்றன.

வியாழக்கிழமை காலை நிலவரப்படி ஏரியில் சுமார் இரண்டு மில்லியன் கன மீட்டர் நீர் தேங்கியுள்ளதாகவும், அப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் ஏரிக்குள் வரும் நீரின் அளவு சுமார் மூன்று மில்லியன் கன மீட்டரை எட்டக்கூடும் என்றும், இதனால் ஏரி உடைந்து வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் பெய்ஜிங் கூறியதாக அரசுக்குச் சொந்தமான சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

1newsnationuser5

Next Post

வெள்ளப் பேரழிவின் சோகம் நீங்குவதற்குள் அடுத்த அதிர்ச்சி!. சீனாவில் 5.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!. அடுத்த தாண்டவத்துக்கு ரெடியான இயற்கை!

Fri Aug 28 , 2026
நேபாளம் மற்றும் திபெத்தில் 460-க்கும் மேற்பட்டோர் பலியான பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரண்டு நாட்கள் கடந்த நிலையில், சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை இன்று 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ‘சின்குவா’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி மதியம் 1:13 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் லோங்சாங் பகுதியில் அதிர்வுகள் உணரப்பட்டன. சீனா நிலநடுக்க வலைப்பமைப்பு மையத்தின் தகவல்களின்படி, இந்த நிலநடுக்கம் […]
russi japan earthquake 11zon

You May Like