வெள்ளப் பேரழிவின் சோகம் நீங்குவதற்குள் அடுத்த அதிர்ச்சி!. சீனாவில் 5.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!. அடுத்த தாண்டவத்துக்கு ரெடியான இயற்கை!

russi japan earthquake 11zon

நேபாளம் மற்றும் திபெத்தில் 460-க்கும் மேற்பட்டோர் பலியான பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரண்டு நாட்கள் கடந்த நிலையில், சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை இன்று 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ‘சின்குவா’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


உள்ளூர் நேரப்படி மதியம் 1:13 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் லோங்சாங் பகுதியில் அதிர்வுகள் உணரப்பட்டன. சீனா நிலநடுக்க வலைப்பமைப்பு மையத்தின் தகவல்களின்படி, இந்த நிலநடுக்கம் 13 கிலோமீட்டர் ஆழத்தில், 29.23 வடக்கு அட்சரேகை மற்றும் 105.22 கிழக்கு தீர்க்கரேகைப் பகுதியில் மையம்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இது ஒரு மேலோட்டமான நிலநடுக்கம் என்பதால், இதன் காரணமாக ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், திபெத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அதிக அபாயத்தைக் காரணம் காட்டி, சீன அதிகாரிகள் தற்போது மீட்பு நடவடிக்கையை நிறுத்தியுள்ளனர். “எனவே, அனைத்து மீட்புக் குழுக்களும் தாங்கள் இருக்கும் இடத்திலேயே காத்திருந்து, மேலதிக அறிவுறுத்தல்களுக்காகத் தயாராக இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், முன்னதாக, அப்பகுதிக்குச் சென்றிருந்த அவசரகாலக் குழுக்கள் “ஒரு கிலோமீட்டர் தூரம் பின்வாங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

1newsnationuser5

Next Post

சமூக வலைதள ஆபாச பதிவுகள்: நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு..

Fri Aug 28 , 2026
சமூக வலைதளங்களில் ஆபாசத்தைத் தூண்டும் வகையிலான பதிவுகள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டதாக எழுந்த புகாரில், நடிகை தர்ஷா குப்தா, திருச்சி சாதனா உள்ளிட்ட 12 பேர் மீது சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சிலர் கட்டண அடிப்படையில் பாலியல் தன்மை கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பேச்சுகளை […]
WhatsApp Image 2026 08 28 at 12.19.11 PM 1

You May Like