பிரபல எவரெஸ்ட், LG பெருங்காய தயாரிப்புகளுக்கு தடை! FSSAI ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..

WhatsApp Image 2026 09 01 at 12.26.21 PM 1

சமையலறையில் அன்றாடம் பயன்படுத்தப்படும் பெருங்காயம் தொடர்பாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரபல நிறுவனங்களின் குறிப்பிட்ட பெருங்காய தயாரிப்புகளில் நிர்ணயிக்கப்பட்ட தர அளவுகள் பூர்த்தி செய்யப்படாதது ஆய்வில் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.


FSSAI மேற்கொண்ட ஆய்வில், எவரெஸ்ட் Food Products மற்றும் Laljee Godhoo & Co. நிறுவனத்தின் LG Brand Unit ஆகியவற்றின் குறிப்பிட்ட பெருங்காய தயாரிப்புகளில் தரநிலை தொடர்பான குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதையடுத்து, சம்பந்தப்பட்ட தயாரிப்புகளின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Compounded Hing எனப்படும் கலவை பெருங்காயத்தில் குறிப்பிட்ட அளவு alcohol-soluble extract இருக்க வேண்டும். FSSAI விதிமுறைகளின்படி, இந்த அளவு குறைந்தபட்சம் 5 சதவீதமாக இருக்க வேண்டும். ஆனால் எவரெஸ்ட் நிறுவனத்தின் சில தயாரிப்பு மாதிரிகளில் இந்த அளவு நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட குறைவாக இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.

எவரெஸ்ட் நிறுவனத்தின் compounded hing மாதிரியில் alcohol-soluble extract அளவு 0 சதவீதமாக இருந்தது. அதேபோல், yellow hing powder மாதிரியில் 3.29 சதவீதமும், black hing powder மாதிரியில் 4.4 சதவீதமும் மட்டுமே இருந்தது. இவை அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட 5 சதவீத அளவுக்கு கீழே உள்ளன.

இதுமட்டுமின்றி, LG Brand Unit தொடர்பான raw hing மாதிரிகளிலும் முக்கியமான தரக்குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. Raw hing-ல் starch அளவு அதிகபட்சம் 1 சதவீதத்திற்குள் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் பரிசோதனை செய்யப்பட்ட ஆறு வகை மாதிரிகளில் starch அளவு 15 சதவீதம் முதல் 32 சதவீதம் வரை இருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுகள் நுகர்வோர் அளித்த புகாரைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளன. சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உற்பத்தி நிலையங்களில் இருந்து சட்டப்படி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் பரிசோதனை செய்யப்பட்டன.

பரிசோதனை முடிவுகளில் தரநிலை மீறல்கள் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மும்பையைச் சேர்ந்த எவரெஸ்ட் Food Products மற்றும் LG Brand Unit மீது FSSAI நடவடிக்கை எடுத்துள்ளது. தரக்குறைபாடு ஏற்பட்டதற்கான காரணங்களை கண்டறிந்து, அதை சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் அடங்கிய விரிவான Corrective Action Plan-ஐ சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், தரநிலைகளை பூர்த்தி செய்யாத தயாரிப்புகளை சந்தையில் இருந்து தன்னார்வமாக திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு FSSAI அறிவுறுத்தியுள்ளது.

இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், எவரெஸ்ட் அல்லது LG நிறுவனங்களின் அனைத்து பெருங்காய தயாரிப்புகளுக்கும் தடை விதிக்கப்படவில்லை. FSSAI ஆய்வில் தரநிலைகளை பூர்த்தி செய்யாததாக கண்டறியப்பட்ட குறிப்பிட்ட compounded hing தயாரிப்புகள் மற்றும் தொடர்புடைய தயாரிப்புகள் மீதே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெருங்காயம் போன்ற அன்றாட சமையல் பொருட்களிலும் உணவு பாதுகாப்பு விதிமுறைகள் கடுமையாக கண்காணிக்கப்படுவதை இந்த நடவடிக்கை வெளிப்படுத்துகிறது. நுகர்வோர் தாங்கள் வாங்கும் உணவுப் பொருட்களின் தயாரிப்பு விவரங்கள், லேபிள் மற்றும் தரத்துக்கான தகவல்களை கவனமாக பரிசோதிப்பது அவசியமாகிறது.

உணவுப் பொருட்களின் தரத்தை உறுதி செய்யும் வகையில் உற்பத்தியாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளை பின்பற்ற வேண்டும் என்பதையும், விதிமுறைகளை மீறும் தயாரிப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் இந்த FSSAI நடவடிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

Also Read: அதிர்ச்சி! 2025ல் தினமும் 660 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு.. 200 பேர் எய்ட்ஸ் காரணமாக உயிரிழப்பு!

Saranya

Next Post

இன்ஸ்டா பிரபலமான அமலா ஷாஜி ஹீரோயினாக அறிமுகம்.. விக்ரம் பிரபுவின் ‘சிட்டி ஆஃப் கோல்டு’ மீது அதிகரிக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு!

Tue Sep 1 , 2026
சமூக வலைதளங்களில் பிரபலமான அமலா ஷாஜி, தற்போது வெள்ளித்திரையில் தனது முதல் அடியை எடுத்து வைக்கிறார். அதுவும் ஏற்கனவே பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ள விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இருவரும் இணையும் புதிய படத்துக்கு ‘சிட்டி ஆஃப் கோல்டு’ என பெயரிடப்பட்டுள்ளது. விக்ரம் பிரபுவின் திரைப்பயணத்தில் இது 26-வது படமாக அமைந்துள்ளது. ஆக்‌ஷன் மற்றும் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை அறிமுக […]
WhatsApp Image 2026 09 01 at 12.38.05 PM 1

You May Like