பெருமாள் அருள் தரும் துளசி வழிபாடு! துளசி பறிக்கும் போது உச்சரிக்க வேண்டிய சக்திவாய்ந்த மந்திரம்!

tulsi

இந்து தர்மத்தில் துளசி தேவி, செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமியின் அம்சமாகப் போற்றி வழிபடப்படுகிறார். துளசிச் செடியை வீடுகளில் வைத்துப் பராமரித்து வளர்ப்பதன் மூலம் ஸ்ரீமன் நாராயணனின் பரிபூரண அருளும், அன்னை மகாலட்சுமியின் ஆசிர்வாதமும் தடையின்றி முழுமையாகக் கிடைக்கும் என்பது தொன்றுதொட்டு வரும் ஐதீகமாகும்.


இதன் காரணமாகவே, பல குடும்பங்களில் அதிகாலை வேளையில் துளசி மாடத்திற்குத் தீபமேற்றி, வலம் வந்து வழிபடுவதையும், துளசி தளங்களைப் பறித்துப் பெருமாளின் திருவுருவப் படத்திற்கு மாலையாக சமர்ப்பித்து வழிபடுவதையும் தினசரி பூஜையாக மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வாறு இறை வழிபாட்டிற்காக துளசி இலைகளைப் பறிக்கும் போது, சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிட்ட மந்திரத்தை உச்சரித்துப் பறிப்பதே முறையான வழிபாட்டு முறையாகும்.

துளசி பறிக்கும் போது உச்சரிக்க வேண்டிய மந்திரம் :

“துளசி அம்ருத ஸம்பூதே ஸதாத்வம் கேசவப் பிரியா

கேசவார்த்தம் லுநாமி த்வாம் வரதா பவ சோபனே.”

இம்மந்திரத்தை மூன்று முறை பக்தியுடன் உச்சரித்து துளசியைப் பறித்துப் பூஜை செய்து வந்தால், துளசி தேவியின் பூரண ஆசியுடன், அன்னை மகாலட்சுமி மனம் குளிர்ந்து நமது நியாயமான வேண்டுதல்களையும் கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்றி தருவாள் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

Read More : வாகன ஓட்டிகளுக்கு சர்ப்ரைஸ் ஆப்பு வைத்த 26 சுங்கச்சாவடிகள்..!! டோல்கேட் கட்டணம் ரூ.20 வரை உயர்ந்ததால் அதிர்ச்சி..!!

Next Post

விரதம் இருப்போர் கவனத்திற்கு..!! செப்டம்பரில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய நாட்கள்..!!

Wed Sep 2 , 2026
ஆன்மிக ரீதியாக பல்வேறு சிறப்புகள் நிறைந்த மாதமாக செப்டம்பர் மாதம் விளங்குகிறது. முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி திருநாளும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தியும் இம்மாதத்திலேயே கோலாகலமாக கொண்டாடப்படுகின்றன. மேலும், முன்னோர்களின் ஆசியை பெறுவதற்குரிய புண்ணிய காலமான மகாளய பட்சம் தொடங்குவதும், பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் பிறப்பதும் இம்மாதத்தின் தனிச்சிறப்பாகும். இவற்றுடன் தொடர்ந்து வரும் நவராத்திரி, தீபாவளி, திருக்கார்த்திகை போன்ற பெருவிழாக்களுக்கான […]
Amman God 2026

You May Like