அதிர்ச்சி! ராணுவ முகாமில் பயங்கர வெடிவிபத்து.. 10 பேர் பலி; 60-க்கும் மேற்பட்டோர் காயம்!

ec2f87aef41a0782b0c88113217c1a89ca6971381bf56c42f1edddeb43a97e1b

பொலிவியாவில் ராணுவ முகாமுக்குள் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததுடன், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பொலிவியாவின் லா பாஸ் நகரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வியாச்சா (Viacha) நகராட்சியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வெள்ளிக்கிழமை பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் ராணுவ முகாமின் ஒரு பகுதியில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது.

வெடிவிபத்து ஏற்பட்ட பகுதியிலேயே வெடிபொருட்கள் மற்றும் வாணவேடிக்கை பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான வாணவேடிக்கை பொருட்கள் வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து வெடிப்பு தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த விபத்துக்கான சரியான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

வெடிவிபத்தின் தாக்கம் சுற்றுவட்டார பகுதிகளிலும் கடுமையாக உணரப்பட்டது. பல வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர்.

வியாச்சா சுகாதாரத்துறை இயக்குநர் ரீட்டா நெப்ராஸ்கா அளித்த தகவலின்படி, உயிரிழப்பு எண்ணிக்கை 10 முதல் 15 வரை இருக்கலாம் என்றும், 62 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. காயமடைந்தவர்களில் 14 பேர் லா பாஸ் நகரில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒரு சிறுமிக்கு மூன்றாம் நிலை தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

வெடிவிபத்து நடந்த ராணுவ வளாகத்துக்கு மருத்துவக் குழுக்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்து, சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

இதற்கிடையில், வெடிவிபத்து ஏற்பட்ட இடத்தில் இன்னும் வெப்பம் நீடிப்பதாக தீயணைப்புத் துறையினர் எச்சரித்துள்ளனர். இதனால் மீண்டும் வெடிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால், பொதுமக்கள் சம்பவ இடத்திலிருந்து குறைந்தது 150 மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

வெடிவிபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமா என்பது குறித்தும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Also Read: வங்கி லாக்கரில் நகை வச்சிருக்கீங்களா?திருடுபோனால் முழுப் பணமும் கிடைக்குமா? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விதிகள்!

Saranya

Next Post

நேபாளத்தில் மீண்டும் நிலச்சரிவு!. சௌலானி நதி அடைப்பு!. வெள்ள எச்சரிக்கையால் மக்கள் பீதி!

Sat Sep 5 , 2026
கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பனிப்பாறை மற்றும் பாறை நிலச்சரிவைத் தொடர்ந்து நேபாளத்தில் இதுவரை 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 5,000-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. இந்தத் துயரத்தின் சுவடுகள் இன்னும் மாறாத நிலையில், தார்ச்சுலா (Darchula) மாவட்டத்தில் ஏற்பட்ட புதிய நிலச்சரிவால் மீண்டும் திடீர் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. தார்ச்சுலா மாவட்டத்தின் அபி ஹிமால் பகுதியில் உள்ள பட்டார் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் அதிக அளவிலான மண் மற்றும் இடிபாடுகள் […]
landslide nepal 30kb

You May Like