இது நமக்கு ஒத்து வராது..! இடைத்தேர்தலை புறக்கணிக்கும் திமுக..? வெளியான ஷாக்கிங் காரணம்..!

DMK office 2025

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளில் நீதிமன்ற வழக்குகள் ஏதுமின்றி இருக்கும் மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய இரு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் (செப். 9) தொடங்க உள்ள நிலையில், அக்டோபர் 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.


நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல், அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), எஸ்.ஜெயக்குமார் (பெருந்துறை), பி.சத்தியபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), டாக்டர் சி.விஜயகுமார் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்) ஆகிய 6 எம்.எல்.ஏ.க்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் இவர்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதை அடுத்து, மொத்தம் 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன. இதில் திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை உள்ளிட்ட 5 தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதித்துள்ளது.

இதன் காரணமாக, வழக்குகள் இல்லாத மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு தொகுதிகளிலும் ஏற்கனவே எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல் மற்றும் பி.சத்தியபாமா ஆகியோரையே மீண்டும் தவெக வேட்பாளர்களாக களம் இறக்க அக்கட்சி தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சிக்கான பலத்தையும், மக்கள் செல்வாக்கையும் நிரூபிக்க தவெக தீவிர வியூகம் வகுத்து வருகிறது.

அதேசமயம், தங்களின் செல்வாக்கு மிக்க தொகுதிகள் என்பதால், மீண்டும் கைப்பற்றி எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளது. மறுபுறம், திமுக – தவெக – அதிமுக என மும்முனைப் போட்டி உருவானால் வாக்குகள் பிரிந்து அது தவெகவுக்கு சாதகமாகிவிடக்கூடும் என்பதால், இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்கலாமா அல்லது நேரடியாக களமிறங்கி விஜய்க்கு பதிலடி கொடுக்கலாமா என்பது குறித்து அறிவாலய வட்டாரத்தில் தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. இதனால் தமிழக அரசியல் களத்தில் இவ்விரு தொகுதிகளின் இடைத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : குட் நியூஸ்..! கேஸ் சிலிண்டருக்கு இனி 45 நாட்கள் காத்திருக்க தேவையில்லை..! மத்திய அரசு தளர்வு அறிவிப்பு..!

Next Post

மேற்கு வங்கம் முதல் தமிழ்நாடு வரை; எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா!. தேசிய அரசியலில் எதிரொலிக்குமா தேர்தல் முடிவுகள்?

Tue Sep 8 , 2026
மேற்குவங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரியால் காலியாக அறிவிக்கப்பட்ட நந்திகிராம் உட்பட மூன்று மாநிலங்களில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களை திங்கட்கிழமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இவர் தான் வெற்றிபெற்ற பவானிப்பூர் தொகுதியைத் தக்கவைக்க முடிவு செய்து நந்திகிராமிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. பவானிப்பூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை அவர் தோற்கடித்திருந்தார். மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்குத் தேர்தல் […]
election 30kb

You May Like